த - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தெசாகம்

தசாகம். (சங்க்.அக.)

தோற்குல்லாய்

தோலாற்செய்த குல்லாவகை

தூண்டுசொல்

விளங்காத தெளிவில்லாத பேச்சு

தாவணம்

விலங்குகளுக்கு கழுத்திற்குங்காலுக்கும் இடும் பூட்டுங்கயிறு

திரும்பு

திருப்பு

தந்தை

பண்டைத் தமிழில் பெற்றவனைக் குறிக்கும் படர்க்கைச் சொல். இன்று மூவிடத்துக்கும் பொருந்தும். முந்தையத் தமிழில் எனது தந்தை எந்தை என்றும் எதிர் நிற்பவரின் தந்தை நுந்தை என்றும் சூட்டப்பட்டன

தணல்

தழல்

தம்பட்டம்

தம்பட்டம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும்.

தாழ்வாய்

தாழ்வாய்க்கட்டை
மோவாய்

தும்பு

நார்

தோற்பறை

தோப்பறா

தமரம்

அரக்கு

தபாற்காரன்

அஞ்சற்காரன்

தரம்

தகுதி. தந்தரத்திற்கு ஏற்ப (சீவக. 112, உரை).
தக்க சமயம். தரம்பார்த்து அடித்துக்கொண்டு போனான்.
மேன்மை. நீதரமா வருளுடையை (கோயிற்பு. பாயி. 23).
தலை. (யாழ். அக.)
வலிமை. (யாழ். அக.)
தெப்பம். (யாழ். அக.)
வீதம். (w.)
வகுப்பு. முதல்தரம்.
நீலப்பண்புக்கேற்றபடி வரி விதிக்கப்பெற்ற கிராம நிலப்பிரிவு
தீர்வை. தாம்பெற்ற நிலம்
மட்டம். அடியார் படுதுயராயின்வெல்லாம் நிலந்தரஞ்செய்யும் (திவ். பெரியதி. 1, 1, 9)
A Sanskrit suffix added to Tamil words to denote superiority, as in உயர்தரம் ்மன்மையைக் குறிக்கத் தமிழ்ச்சொற்களின் இறுதியில் வரும் ஒரு வடமொழி யிடைச்சொல்.

தற்சமயம்

குறித்தவேளை. (W.)
உற்றவேளை. (சங். அக.)--adv. இப்பொழுது. Colloq.

தாம்

அவர்கள். தாம் சொன்னதைத் தாபித்தனர்.
மரியாதை குறிக்கும் முன்னிலைச்சொல். தாமென்ன சொன்னீர்கள்.
முதல்வேற்றுமையில் பன்மைப்பெயரைச் சார்ந்துவரும் சாரியை. அவர்தம் வந்தார்.--part. An expletive, as in வருவர்தாம்
அசைநிலை. (நன். 441.)

திரவிணம்

பொன்
பாக்கியம்
வலி

திருமுன்

திருமுன்பு. விழுந்தவர் திருமுன்சென்று (திருவாலவா. 27, 28)
திருமுன்னர்.

திருமுன்பு

திருமுன்னர்
சன்னதி

தேயம்

தியானிக்கத்தகுந்தது. அறிவோர் தேயமாவது யார்க்குமெட்டாதது (கந்தபு. அவைபுகு.126).