ச - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சாண்

ஒன்பது விரற்கடையுள்ள அளவு

செயப்படுபொருள்

வினை முதலது தொழிலின் பயனை அடைவது
நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருள்

சத்தம்

ஒலி

சீவு

முடி சீவு; தலை வாரு
செதுக்கு
மரம் முதலியன இழை
பாக்கு முதலியன சீவு

சொல்லியல்

சொற்பிறப்பியல் - சொற்களின் வேர்களையும், அவற்றின் உருவாக்க முறைகளையும் ஆய்ந்தறியும் மொழியியல் பிரிவு
சொற்தோற்றம்
சொல்லிலக்கணம்

சேர்வை

பொருட்களின் கலவை

சலங்கை

நடனம் ஆடுவோர் கால்களில் அணியும் அணி. இது
நடனம் ஆடும்போது மணிச் சத்தம் எழுப்பும்.

சொண்டு

பறவை மூக்கு
உதடு
தடித்த உதடு
கனத்த பாத்திர விளிம்பு
சொட்டை, தலை வழுக்கை
குற்றம்
அற்பன், சொண்டறை

சங்ககாலம்

பல தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலம்

சேமக்கலம்

சேமக்கலம் என்பது கஞ்சக்கருவி வகை சார்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது தூய வெண்கலத்தால் ஆனது. தாதராட்டத்தில்
கோயில்களில்
இறப்பு வீடுகளில் இக் கருவி இசைக்கப்படுகிறது.

சல்லாபம்

இதமான உரையாடல்
காமப்பேச்சு, சரசப் பேச்சு, காதல்மொழி

சீவுளிக்கூடு

பென்சிலை கூராக்குவதற்கு சிறுவர்கள் பயன்படுத்தும் பொறி.
சீவுளிக்கூடு (சீவுளி)

சிந்தாமணி நிகண்டு

சிந்தாமணி நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் 1876 இல் யாழ்ப்பாணம்
வல்வெட்டித்துறையில் வாழ்ந்த ச.வைத்தியலிங்கம்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது