உ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உள்

உள்ளிடம்
அந்தரங்கமானது
மனம்
மனவெழுச்சி
இடம்
ஏழாம் வேற்றுமை உருபு

உள்கு

நினைத்தல் செய்
மனமழி [உள்குதல்]

உள்ளடக்கு

உட்படச் செய்
மறைத்தல் செய் [உள்ளடக்குதல்]

உள்ளது

இருக்கும் பொருள்
விதிக்கப்பட்டது
மெய்
ஆன்மா

உள்ளம்

மனம்
கருத்து
ஊக்கம்
மனச்சாட்சி
ஆன்மா
ஒரு வகை மீன்

உள்ளல்

கருத்து
ஒருவகை மீன்

உள்ளி

வெங்காயம்
வெள்ளைப்பூண்டு

உறுதி

திடம்
வல்லமை. இருவருந்த முறுதியினின்றாரென்னில் (சி. சி. 1, 35)
நிச்சயம்
அறம், பொருள், இன்பம், வீடு
புருஷார்த்தம். மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரா நெடுக்கப்பட்ட பொருள் (குறள், உரைப்பாயிரம்).
திடவாக்கு. ஆண்டவன்புகலுறுதியு மாண்மையுங் கேட்டு (பாரத. புட்ப. 47)
செய்யத்தக்கது. வீடுதலுறுதியென்றே விளம்பி (கந்தபு. சூர. வதை. 64)
நன்மை. புத்தேளாவதே யுறுதி யென்றான். (சீவக. 1235).
மந்திரம். பொய்கையு குட்படவுரைத்தனனுறுதிநோக்கினான் (சீவக. 1216)
ஆதாரம். உலகுக்கோ ருறுதி தன்னை (தேவா. 481, 5)
நல்லுபதேசம்
இலாபம். கேட்டினுமுண்டோ ருறுதி (குறள், 796)
கல்வி. (திவா.)
ஆட்சிப்பத்திரம்
விடாப்பிடி

உற

கிட்ட, ஒல்கியுற நின்றான் (சீவக. 2014)
ஓர் உவமவுருபு. முந்துறக்காண்டல் (தஞ்சைவா. 35, தலைப்பு).

உல

ஒழி

உயவை

காடு

உகை

செலுத்து

உமறுப்புலவர்

சீறாப்புராணம் பாடிய முஹம்மதியப்புலவர்

உளர்

கோதுதல். கதுப்புளரி (குறுந். 82)
தலைமயிர் ஆற்றுதல். கூந்தலுளர (கலித். 105)
அசைத்தல். விரைவளர் கூந்தல் வரைவளி யுளர (புறநா. 133,4)
சிதறுதல். கனைத்துவண் டுளந்ததார்க் காளைசீவ கன்னரோ (சீவக. 707)
தடவுதல். வல்வின்ஞா ணுளர்தீயே (கலித். 7)
யாழ்முதலியன வாசித்தல். மென்மொழி மேவலரின்னரம் புளர (திருமுரு. 142).
கலக்குதல். சேலங் குளர்வயற் சேவூர் (இறை. 2, பக். 41)
தாமதித்தல். அவனை யுளராதழிக்க (விநாயகபு. 52, 18)
அசைதல். நீருளர் பூந்தா மரைப்போது (கலித். 112)
சுழலுதல்
உறுதியற் றாடுதல்

அ உ வறியா வறிவிலிடைமகனே (யாப். வி. 37.)

உள்ளவாறு

உண்மை. உள்ளவாறெனக் குரைசெய்ம்மின் (தேவா. 385, 2)
உள்ளபடி

உளவு

இரகசியம்
வேவு

உறழ

உவமையுருபு. என்ன வுறழத் தகைய நோக்கொடு (தொல். பொ. 287).

உம்

Connective particle implying
(a) simple connection, as in சேரனும் பாண்டியனும்
(b) negation, as in மறப்பினு மோத்துக் கொளலாகும்
(c) speciality whether of superiority or inferiority, as in குறவரு மருளுங் குன்றம் or புலையனும் விரும்பாத யாக்கை
எண்ணும்மை
எதி்ர்மறையும்மை
சிறப்பும்மை
ஜயவும்மை
எச்சவும்மை
முற்றும்மை
தெரிநிலையும்மை
ஆக்க வும்மை. (நன். 425.)
Ending of (a) 3rd (pers. sing.) of all genders and of the (impers. pl.) of verbs of the present as well as the future tense
பலர்பாலொழிந்த படர்க்கை நிகழ்கால எதிர்கால முற்று விகுதி
(b) (imp. pl.) ஏவற்பன்மைவிகுதி
(c) (opt.) auxiliary வியங்கோல்துணைவிகுதி. பழுதுறாவிரைவுப்பொருளைக்காட்டும் வினையெச்சவிகுதி. நடக்கலுமாங்கே (கலித். 39, 34)

உலாம்

ஓருவமச்சொல். வேயுலாந்தோளினார் (சீவக. 1581).