இ - வரிசை 91 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இரட்டல்

இரட்டித்தல்
ஒலித்தல்
கர்ச்சித்தல்

இரட்டு

இரண்டாகு
ஒலி செய்
மாறியொலி செய்
முன்னும் பின்னும் அசைதல் செய்
[இரட்டுதல்]

இரட்டுறு

இரு பொருள் படு
ஐயுறு
மாறுபடு
[இரட்டுறுதல், இரட்டுதல்]

இரண வைத்தியம்

கத்தியால் அறுத்துச் செய்யும் வைத்திய சிகிச்சை
சத்திர சிகிச்சை - இரண வைத்தியன்

இரத்தப்பிரியன்

கொலை விருப்பமுடையவன்

இரத்த மண்டலி

சிவப்புப் புள்ளிகளுள்ள ஒரு விஷப்பாம்பு

இரத்தின கம்பளம்

வர்ணச் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கம்பளம்

இரதம்

தேர்
பல்
புணர்ச்சி

இரதி

மன்மதன் மனைவி
விருப்பம்
புணர்ச்சி

இரப்பு

பிச்சையெடுத்தல் - இரப்பாளன்

இரலை

ஒருவகை மான்
ஒரு வகை ஊதுகொம்பு

இரவி

கதிரவன்
மலை
மூக்கின் வலப்பக்கத் துவாரம்
வாணிகத் தொழில்

இரவுக்குறி

(அகப்பொருள்) இரவில் காதலர் கூடுவதற்குக் குறிக்கப்பட்ட இடம்

இரற்று

சத்தமிடு
(பறவை போல்) கத்துதல் செய்
[இரற்றுதல்]

இரா

இராத்திரி

இராக்கதம்

பெண்ணை வலிதல் கொண்டுசென்று மணந்து கொள்ளல்

இராக்குருடு

மாலைக்கண்

இராகு

நவக்கிரகங்களில் ஒன்று

இராசபிளவை

முதுகில் தோன்றும் பிளவைக் கட்டி

இராட்டினம்

(சக்கரமுள்ள) நூற்கும் கருவி
நூல் சுற்றும் கருவி
கிணற்றிலிருந்து நீர் இறைக்க உதவும் கப்பி
ஏறிச் சுழன்று விளையாட உதவும் சுழல் தேர்