தமிழ் எழுத்துக்கள்

தமிழ் மொழி வரலாறு

தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003). இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

 • சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
 • சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
 • பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
 • மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800)
 • இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)

பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

சொற்பிறப்பு

தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ் - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர். சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

எழுத்துமுறை

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.

எழுத்துக்களின் வகை

 • உயிர் எழுத்து
 • மெய் எழுத்து
 • எழுத்தோரன்ன குறியீடுகள் (ஆய்தம், குற்றியல் இகரம், குற்றியல் உகரம்)

எழுத்துக்களின் விரிபு

 • ஒவ்வொரு பிறப்பிடமும் (எழுத்து) அவ்விடத்தைச் சார்ந்த பல்வேறு ஒலியம்களை குறிக்கும்.

எழுத்துக்களின் பெருகல்

 • உயிர்மெய் எழுத்து

உயிர் எழுத்துக்கள்

உயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள்(குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்(நெடில்) எனவும் வழங்கப்படும்.

குறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.

பெயர் அகரம் ஆகாரம் இகரம் ஈகாரம் உகரம் ஊகாரம் எகரம் ஏகாரம் ஐகாரம் ஒகரம் ஓகாரம் ஒளகாரம்
எழுத்து
IPA ʌ ɑː i u e ʌj o ʌʋ
சொல் அம்மாஆடு இலைஈட்டி உடைஊஞ்சல் எட்டுஏணி ஐந்து ஒன்பது ஓடம் ஒளவை

ஆய்தம் - ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.

ஆய்தம் உயிரின் தன்மைகளையும், மெய்யின் தன்மைகளையும் தேவையெனின் ஏற்க வல்லது.

இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

எ.கா:

 • அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
 • இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
ஆய்தம் விசர்க (visarga) எனும் வடமொழி இலக்கணத்தில் இருந்து வேறுபட்டது.

ஒலியம் "F" பிறப்பிடம் "வ்" கொண்டது. தவறாக சிலர் ஒலியம் "F" பிறப்பிடம் "ப்" கொண்டது என்றும், மேலும் மிக மிக தவறாக ஆய்தம் பாவிக்கக் கூடாத இடத்தில் ஆய்தத்தைப் பாவித்து "F=ஃப்" எனும் வழமையை ஓரளவிற்க்கு நிலைநாட்டி விட்டனர். எனவே தவறெனினும் ஃப்=F என்று சமகால பாவனையில் உண்டு. அத்துடன் F=வ், F=ஃவ், F=ஃப் எனும் மூன்று வேறுபட்ட சமகால பாவனைகள் காணப்படுகின்றன.

ஆய்தம் ஓர் சொல்லின் முதல் எழுத்தாக வரும். உ+ம்: ஃகான்
(எனவே ஆய்தம் உயிர் எழுத்துக்களுடனும் மெயெழுத்துக்களுடனும் சேரவல்லது என்பதும் உறுதி.)
(எனவே சில பாவனைகளில் ஆய்தம் அகரமெய்யுடன் சேர்ந்து வருகின்றதா அல்லது மெய்யுடன் சேர்ந்து வருகின்றதா எனும் ஊகம் வரூஉம் இடத்தைக்கொண்டு நிர்ணயிக்கப்படவேண்டும்.)


ஆய்தம் ஓர் சொல்லின் முற்று எழுத்தாக வரும், உ+ம்: முப்பஃ ¸கியசஃ, போந்துகஃ

ஆய்தம் ஓர் சொல்லின் இடையிலே ஓர் எழுத்தாக வரும், உ+ம்: அஃறிணை, மிஃதே, சஃது

ஆய்தம் ஈர் எழுத்தாக நீட்ட இசைவது. உ+ம்: க்ஃ, க்ஃஃ, ஃக், ஃஃக், அஃ, ஃஇ, அஃஃ, ஃஃஇ. [ஆயுதத்திற்கு முப்பாற் புள்ளி என்ற பெயரும் உண்டு. தவிரத் தனிநிலை, புள்ளி, நலிபு என்றும் ஆய்தத்தை அழைத்திருக்கிறார்கள்.]

பெயர் அஃகேனம்
எழுத்து
சொல் எஃகு
IPA h

மெய்யெழுத்துகள்

தமிழ் அரிச்சுவடியில் க் தொடக்கம் ன் வரையுள்ள 18 எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் எனப்படுகின்றன. இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாக உள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துக்கள் வல்லினத்தையும், மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.

பெயர் ககரம் ஙகரம் சகரம் ஞகரம் டகரம் ணகரம் தகரம் நகரம் பகரம்
எழுத்துக் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப்
IPA k ŋ s ɲ ʈ ɳ n p
சொல் பக்கம் சிங்கம் பச்சை பஞ்சு பட்டு கண் பத்து பந்து உப்பு
பெயர் மகரம் யகரம் ரகரம் லகரம் வகரம் ழகரம் ளகரம் றகரம் னகரம்
எழுத்து ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
IPA m j ɾ l ʋ ɻ ɭ r n
சொல் அம்பு மெய் பார் கல்வி கவ்வு வாழ்வு உள்ளம் வெற்றி அன்பு

உயிர் + மெய் எழுத்துக்களின் இணைவு அட்டவணை

+
க் க் + அ க் + ஆ கா kɑː க் + இ கி ki க் + ஈ கீ kiː க் + உ கு ku க் + ஊ கூ kuː க் + எ கெ ke க் + ஏ கே keː க் + ஐ கை kʌj க் + ஒ கொ ko க் + ஓ கோ koː க் + ஔ கௌ kʌʋ
ங் ங் + அ ŋʌ ங் + ஆ ஙா ŋɑː ங் + இ ஙி ŋi ங் + ஈ ஙீ ŋiː ங் + உ ஙு ŋu ங் + ஊ ஙூ ŋuː ங் + எ ஙெ ŋe ங் + ஏ ஙே ŋeː ங் + ஐ ஙை ŋʌj ங் + ஒ ஙொ ŋo ங் + ஓ ஙோ ŋoː ங் + ஔ ஙௌ ŋʌʋ
ச் ச் + அ ச் + ஆ சா sɑː ச் + இ சி si ச் + ஈ சீ siː ச் + உ சு su ச் + ஊ சூ suː ச் + எ செ se ச் + ஏ சே seː ச் + ஐ சை sʌj ச் + ஒ சொ so ச் + ஓ சோ soː ச் + ஔ சௌ sʌʋ
ஞ் ஞ் + அ ɲʌ ஞ் + ஆ ஞா ɲɑː ஞ் + இ ஞி ɲi ஞ் + ஈ ஞீ ɲiː ஞ் + உ ஞு ɲu ஞ் + ஊ ஞூ ɲuː ஞ் + எ ஞெ ɲe ஞ் + ஏ ஞே ɲeː ஞ் + ஐ ஞை ɲʌj ஞ் + ஒ ஞொ ɲo ஞ் + ஓ ஞோ ɲoː ஞ் + ஔ ஞௌ ɲʌʋ
ட் ட் + அ ʈʌ ட் + ஆ டா ʈɑː ட் + இ டி ʈi ட் + ஈ டீ ʈiː ட் + உ டு ʈu ட் + ஊ டூ ʈuː ட் + எ டெ ʈe ட் + ஏ டே ʈeː ட் + ஐ டை ʈʌj ட் + ஒ டொ ʈo ட் + ஓ டோ ʈoː ட் + ஔ டௌ ʈʌʋ
ண் ண் + அ ɳʌ ண் + ஆ ணா ɳɑː ண் + இ ணி ɳi ண் + ஈ ணீ ɳiː ண் + உ ணு ɳu ண் + ஊ ணூ ɳuː ண் + எ ணெ ɳe ண் + ஏ ணே ɳeː ண் + ஐ ணை ɳʌj ண் + ஒ ணொ ɳo ண் + ஓ ணோ ɳoː ண் + ஔ ணௌ ɳʌʋ
த் த் + அ t̪ʌ த் + ஆ தா t̪ɑː த் + இ தி t̪i த் + ஈ தீ t̪iː த் + உ து t̪u த் + ஊ தூ t̪uː த் + எ தெ t̪e த் + ஏ தே t̪eː த் + ஐ தை t̪ʌj த் + ஒ தொ t̪o த் + ஓ தோ t̪oː த் + ஔ தௌ t̪ʌʋ
ந் ந் + அ ந் + ஆ நா nɑː ந் + இ நி ni ந் + ஈ நீ niː ந் + உ நு nu ந் + ஊ நூ nuː ந் + எ நெ ne ந் + ஏ நே neː ந் + ஐ நை nʌj ந் + ஒ நொ no ந் + ஓ நோ noː ந் + ஔ நௌ nʌʋ
ப் ப் + அ ப் + ஆ பா pɑː ப் + இ பி pi ப் + ஈ பீ piː ப் + உ பு pu ப் + ஊ பூ puː ப் + எ பெ pe ப் + ஏ பே peː ப் + ஐ பை pʌj ப் + ஒ பொ po ப் + ஓ போ poː ப் + ஔ பௌ pʌʋ
ம் ம் + அ ம் + ஆ மா mɑː ம் + இ மி mi ம் + ஈ மீ miː ம் + உ மு mu ம் + ஊ மூ muː ம் + எ மெ me ம் + ஏ மே meː ம் + ஐ மை mʌj ம் + ஒ மொ mo ம் + ஓ மோ moː ம் + ஔ மௌ mʌʋ
ய் ய் + அ ய் + ஆ யா jɑː ய் + இ யி ji ய் + ஈ யீ jiː ய் + உ யு ju ய் + ஊ யூ juː ய் + எ யெ je ய் + ஏ யே jeː ய் + ஐ யை jʌj ய் + ஒ யொ jo ய் + ஓ யோ joː ய் + ஔ யௌ jʌʋ
ர் ர் + அ ɾʌ ர் + ஆ ரா ɾɑː ர் + இ ரி ɾi ர் + ஈ ரீ ɾiː ர் + உ ரு ɾu ர் + ஊ ரூ ɾuː ர் + எ ரெ ɾe ர் + ஏ ரே ɾeː ர் + ஐ ரை ɾʌj ர் + ஒ ரொ ɾo ர் + ஓ ரோ ɾoː ர் + ஔ ரௌ ɾʌʋ
ல் ல் + அ ல் + ஆ லா lɑː ல் + இ லி li ல் + ஈ லீ liː ல் + உ லு lu ல் + ஊ லூ luː ல் + எ லெ le ல் + ஏ லே leː ல் + ஐ லை lʌj ல் + ஒ லொ lo ல் + ஓ லோ loː ல் + ஔ லௌ lʌʋ
வ் வ் + அ ʋʌ வ் + ஆ வா ʋɑː வ் + இ வி ʋi வ் + ஈ வீ ʋiː வ் + உ வு ʋu வ் + ஊ வூ ʋuː வ் + எ வெ ʋe வ் + ஏ வே ʋeː வ் + ஐ வை ʋʌj வ் + ஒ வொ ʋo வ் + ஓ வோ ʋoː வ் + ஔ வௌ ʋʌʋ
ழ் ழ் + அ ɻʌ ழ் + ஆ ழா ɻɑː ழ் + இ ழி ɻi ழ் + ஈ ழீ ɻiː ழ் + உ ழு ɻu ழ் + ஊ ழூ ɻuː ழ் + எ ழெ ɻe ழ் + ஏ ழே ɻeː ழ் + ஐ ழை ɻʌj ழ் + ஒ ழொ ɻo ழ் + ஓ ழோ ɻoː ழ் + ஔ ழௌ ɻʌʋ
ள் ள் + அ ɭʌ ள் + ஆ ளா ɭɑː ள் + இ ளி ɭi ள் + ஈ ளீ ɭiː ள் + உ ளு ɭu ள் + ஊ ளூ ɭuː ள் + எ ளெ ɭe ள் + ஏ ளே ɭeː ள் + ஐ ளை ɭʌj ள் + ஒ ளொ ɭo ள் + ஓ ளோ ɭoː ள் + ஔ ளௌ ɭʌʋ
ற் ற் + அ ற் + ஆ றா rɑː ற் + இ றி ri ற் + ஈ றீ riː ற் + உ று ru ற் + ஊ றூ ruː ற் + எ றெ re ற் + ஏ றே reː ற் + ஐ றை rʌj ற் + ஒ றொ ro ற் + ஓ றோ roː ற் + ஔ றௌ rʌʋ
ன் ன் + அ ன் + ஆ னா nɑː ன் + இ னி ni ன் + ஈ னீ niː ன் + உ னு nu ன் + ஊ னூ nuː ன் + எ னெ ne ன் + ஏ னே neː ன் + ஐ னை nʌj ன் + ஒ னொ no ன் + ஓ னோ noː ன் + ஔ னௌ nʌʋ

கிரந்த எழுத்துக்கள்

கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் ஆங்கில மற்றும் அறிவியல் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. (குறிப்பு: கிரந்த குறியீடுகள் குறிப்பிட்ட ஒலியம்களை மட்டும் சுட்டும்.)

எழுத்து ஶ் ஜ் ஷ் ஸ் ஹ் க்ஷ் ஸ்ரீ
IPA ɕ, ʃ ʤ ʂ s ɦ
சொல் ஶர்மா ராஜஸ்தான் விஷ்ணு சமஸ்கிருதம் ஹிந்தி லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்
+
ஶ் ஶா ஶி ஶீ ஶு ஶூ ஶெ ஶே ஶை ஶொ ஶோ ஶௌ
ஜ் ஜா ஜி ஜீ ஜு ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ
ஷ் ஷா ஷி ஷீ ஷு ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ
ஸ் ஸா ஸி ஸீ ஸு ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ
ஹ் ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ
க்ஷ் க்ஷ க்ஷா க்ஷி க்ஷீ க்ஷு க்ஷூ க்ஷெ க்ஷே க்ஷை க்ஷொ க்ஷோ க்ஷௌ

தமிழ் இலக்கங்கள்

தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து நூறு எந்
1 2 3 4 5 6 7 8 9 10 100 1000

Sample text in Tamil

மனிதப் பிறவியினர் சகலரும் சுகந்திரமாகவே பிறக்கின்றனர்; அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்ப்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடன் ஒருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்.

Transliteration

Maṉitap piṛaviyiṉar čakalarum čutantiramākavē piṛakkiṉṛaṉar; avarkaḷ matippilum urimaikaḷilum čamamāṉavarkaḷ. Avarkaḷ niyāyattaiyum maṉačāṭčiyaiyum iyaṛpaṇpākap peṛṛavarkaḷ. Avarkaḷ oruvaruṭaṉoruvar čakōtara uṇarvup pāṅkil naṭantukoḷḷal vēṇṭum.