ஒ - வரிசை 8 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஒரூஉமோனை

ஒரூஉத்தொடை.

ஒரோவென்று

ஒவ்வொன்று.

ஒலிகுறி

ஒலியைக்காட்டுங்குறி.

ஒலிப்பண்பு

ஒசைப்பண்பு.

ஒலியெழுத்து

ஒலிவடிவாமெழுத்து.

ஒல்காமை

தளராமை.

ஒல்குதல்

ஒல்கல்.

ஒல்லாடி

ஒஞ்சட்டை.

ஒல்லார்

பகைவர்.

ஒழிகடை

ஈறு.

ஒழிய

தவிர.

ஒழியிசையெஞ்சணி

ஒழியிசையெச்சம்.

ஒழுகலான்

ஒழுங்கில்லாதவன்.

ஒழுகிசைத்துள்ளல்

கலிப்பா வோசையினொன்று.

ஒழுகை

ஒழுகு
பண்டி

ஒழுக்கெறும்பு

ஓரெறும்பு.

ஒளிக்கடல்

பல்.

ஒளித்துவிளையாடல்

கண்பொத்திவிளையாடல்.

ஒளிப்பிடம்

மறைவிடம்.

ஒளிப்பிழம்பு

அக்கினிச்சுவாலை.