ஈ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஈராட்டி

இரண்டு மனைவி
ஈராடி
காற்று மாறி அடிக்கை
காற்றின் அமைதி
நிலையின்மை

ஈரித்தல்

ஈரமாதல்
குளிர்தல்

ஈரியநெஞ்சம்

அன்புள்ளமனது.

ஈரிழை

இரட்டையிழைகொண்டது
ஆடையின் இரட்டை நூல்

ஈருயிர்க்காரி

கெர்ப்பிணி
சூல் கொண்டவள்

ஈர்கோலி

ஈர்வாரி.

ஈர்க்குச்சம்பா

ஒரு நெல்.

ஈர்க்குமல்லிகை

ஒரு மல்லிகை.

ஈர்ங்கை

உருண்டுகழுவிய கை.

ஈர்ஷை

பொறாமை.

ஈர்பட்டு

ஈர்வாணி.

ஈர்ப்பி

ஈர்.

ஈர்மை

குளிர்ச்சி
நுண்மை
இனிமை
பெருமை
வருத்தம்

ஈர்வலித்தல்

ஈர்வாரல்.

ஈர்வாணி

ஈர்க்குக்கயிறு.

ஈர்வாரி

ஈருருவுங்கருவி.

ஈர்வெட்டு

ஈர்பட்டு.

ஈழமண்டலம்

இலங்கை.

ஈழைக்கொல்லி

தாளகம்.

ஈளைக்காரன்

கோழைநோயாளி.