வரை

"வரை" என்பதன் தமிழ் விளக்கம்

வரை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Varai/

கோடு
இரேகை. (சூடா)
எழுத்து. (பிங்.)
முத்துக்குற்றத் தொன்று. (S. I. I. ii, 78.)
மூங்கில். மால்வரை நிவந்த வெற்பின் (திருமுரு. 12)
மலை. பனிபடு நெடுவரை (புறநா. 6)
மலைச்சிகரம். மந்திவரைவரை பாய (பரிபா. 15, 39)
பக்கமலை. வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந (மதுரைக். 42)
கல். வரையம்பு காயெரிமாரிகளாய் (திருநூற். 34)
சிறுவரம்பு
நீர்க்கரை. (சூடா.)
எல்லை. வளவரை (குறள், 480)
அளவு. உளவரை (குறள், 480)
விரலிறையளவு
காலம். சிறு வரை (பு. வெ. 12, பெண்பாற். 17)
இடம். மலைவரை மாலை (பரிபா. 10, 1)
வரைவு,(adv.) வரைக்கும்.
மலை

Line
Line as in palm of hand or on the fingers
wrinkle, as on the body
Letter
A defect in pearls
Bamboo
Mountain
Mountain top, peak
Side-hill; slope of a hill
Stone
Small ridge, as of a paddy field
Bank, shore
Limit, boundary
Measure of the distance between the joints of the forefingers
Measure extent
Time
Place

தமிழ் களஞ்சியம்

  • திருக்குறள் » அறத்துப்பால் » இல்லறவியல் » புதல்வரைப் பெறுதல்
  • திருக்குறள் » பொருட்பால் » அங்கவியல் » வரைவின்மகளிர்
  • குழந்தைகளுக்கான பாடல்கள் » எவரையும் ஏளனம் நீ செய்யாதே
  • வரை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.