வட்டம்

"வட்டம்" என்பதன் தமிழ் விளக்கம்

வட்டம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Vaṭṭam/

(பெயர்ச்சொல்) மண்டலம். (தொல். சொல். 402, உரை.)
பரிவேடம். (சிலப். 10, 102, உரை.) (சினேந். 164.)
குயவன் திரிகை. (பிங்.)
வண்டிச்சக்கரம். (யாழ். அக.)
உண்கலமாய்த் தைக்கும் குலையின் நடுப்பாகம். Loc.
தடவை. விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ் செய்து (விநாயகபு. 74, 214).
சுற்று
ஒரு கிரகம் வான மண்டலத்தை ஒரு முறை சுற்றிவருங் காலம். அவன் சென்று ஒரு வியாழவட்டமாயிற்று.
சுற்றுப்பிரதேசம். கோயில் வட்டமெல்லாம் (சீவக. 949)
சில ஊர்களைக் கொண்ட பிரதேசம்
வட்டணை
தார்பொலி புரவிட்டந் தான்புகக் காட்டுகின்றாற்கு (சீவக. 442)
விருந்து முதலியவற்றிற்குச் சமைத்த உபகரணத்திட்டம்
அப்பவகை. பாகொடு பிடித்த விழைசூழ் வட்டம் (பெரும்பாண். 378)
வட்டப்பாறை
வடவர்தந்த வான்கேழ் வட்டம் (நெடுநல். 51)
ஆலவட்டம். செங்கேழ் வட்டஞ் சுருக்கி (நெடுநல். 58.).1
வாகுவலயம். (பிங்.)1
தராசுத்தட்டு. வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே (திருமந். 1781).1
கைம்மணி. (பிங்.)1
கேடகம். ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111). (பிங்.)20.
முத்து வகை. முத்துவட்டமும் அனுவட்டமும் (S. S. I. I. ii, 22).2
பீடம். (யாழ். அக.)2
குளம். (பிங்.)2
கொள்கலம். (யாழ். அக.)2
நீர்ச்சால். (பிங்.)2
நீரெறிகருவி. பூநீர்பெய் வட்டமெறிய (பரிபா. 21, 42).2
வளைவு. வில்லை வட்டப் படவாங்கி (தேவா. 5, 9).2
பாராவளை. புகரினர் சூழ் வட்டத்தவை (பரிபா. 15, 61). (பிங்.)2
ஆடை. வாலிழை வட்டமும் (பெருங். உஞ்சைக். 42, 208). (சூடா.)2
எல்லை. தொழுவல்வினை யொல்லை வட்டங்கடந் தோடுத லுண்மை (தேவா. 5, 9).30. Polish, refinement
திருத்தம். வட்டமாய்ப் பேசினான்
ஐந்நூறு சால்கொண்ட நீரளவு.3
மக்கட் பிரிவு
யானையின் நடுச்செவி. (பி்ங்.)3
தாழ்வு. (அக. நி.)3
களத்திற் சூடடிப்பதற்குப் பரப்பிய நெற்கதிர்
வட்டமரம்
தோறும். ஆட்டைவட்டம் காசு ஒன்றுக்கு . . . பலிசை (S. I . I. ii, 122, 27)

(பெயர்ச்சொல்) Circle, circular from, ring-like shape
Halo round the sun or moon, a karantuai
Potter's wheel
Wheel of a cart
The central portion of a leaf-plate for food
vrtti. Turn, course, as of a mantra
Revolution, cycle
Cycle of a planet
Circuit, surrounding area or region
A revenue unit of a few villages
Items or course of a meal
A kind of pastry
Circular ornamental fan
Bracelet worn on the upper arm
Scale-pan
Hand-bell
Shield
A kind of pearl
Seat chair
Pond, tank
Receptacle
Large waterpot
A kind of water-squirt
Curve, bend
A kind of boomerang
Cloth
Boundary, limit
A unit for measuring the quantity of water=500 average potfuls, as the amount necessary for a paku for one week
Sect, tribe
The middle ear of an elephant
Lowness depth, as of a valley
Sheaves of paddy spread on a threshingfloor for being threshed
Each, every

வேற்றுமையுருபு ஏற்றல்

வட்டம் + ஐவட்டத்தை
வட்டம் + ஆல்வட்டத்தால்
வட்டம் + ஓடுவட்டத்தோடு
வட்டம் + உடன்வட்டத்துடன்
வட்டம் + குவட்டத்துக்கு
வட்டம் + இல்வட்டத்தில்
வட்டம் + இருந்துவட்டத்திலிருந்து
வட்டம் + அதுவட்டத்தது
வட்டம் + உடையவட்டத்துடைய
வட்டம் + இடம்வட்டத்திடம்
வட்டம் + (இடம் + இருந்து)வட்டத்திடமிருந்து

வட்டம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.