நய

"நய" என்பதன் தமிழ் விளக்கம்

நய

(ஒலிப்புமுறை) ISO 15919: /Naya/

விரும்புதல். பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று (குறள், 150).
சிலாகித்தல். நல்லறிவுடையோர் நயப்பது வேண்டியும் (பத்துப்பாட்டு, நச். உரைச்சிறப்.).
கௌரவித்தல்
பிரியப்படுத்துதல்.
தட்டிக்கொடுத்தல்.
கெஞ்சுதல். அவன் எவ்வளவோ நயந்து கேட்டான்.
அன்பு செய்தல். (சூடா.)
பின் செல்லுதல். (யாழ். அக.)
மகிழ்தல். வல்லைமன்ற நீ நயந்தளித்த (புறநா. 59).
இனிமையுறுதல். நஞ்சினுங் கொடிய நாட்ட மமுதினு நயந்து நோக்கி (கம்பரா. பூக்கொய். 7).
இணங்கிப் போதல். யாரிடத்தும் அவன் நயந்து போவான்.
பயன்படுதல். (யாழ். அக.)
மலிதல். இவ்வருஷத்தில் தான்யம் நயத்தது.
மேம்படுதல். அதற்கிது நயத்திருக்கிறது

To desire greatly, long for
To compliment, appreciate
To respect, esteem
To please
To coax
To beseech, implore
To love, woo, show affection for
To cut upon
to follow
To be glad
to rejoice
To be sweet, pleasing
To be congenial
to be agreeable
To be advantageous, profitable, useful
To be cheap
To excel,surpass, improve

தமிழ் களஞ்சியம்

  • நாலடியார் » அறத்துப்பால் » பிறர்மனை நயவாமை
  • இலக்கியம் » செய்யுளியல் சுட்டும் மொழிநடை » ஓசைநயம்
  • நய என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.