நன்கு

"நன்கு" என்பதன் தமிழ் விளக்கம்

நன்கு

(ஒலிப்புமுறை) ISO 15919: /Naṉku/

நல்லது. நல்லவையு ணன்கு செலச்சொல்லுவார் (குறள், 719)
மிகுதி. (அக. நி.)
அழகு. (சூடா.) பொருளின் விளைவு நன்கறிதற்கு (பு.வெ.1,4 பொளு).
சௌக்கியம். இமையவர் காதல் பெற்று நன்காவரக் காண்டியால் (கம்பரா.நகர்நீ.24).
நிலைபேறு, இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு (குறள், 513)
நற்சகுனம். நன்றி மதுரைப்பதியை நன்கொடு கடந்தார் (திருவாத.பு.மந்திரி.38)
மகிழ்ச்சி. ஆவிநன்குறா திருப்ப (திருவாலவா. 16, 6).
மிகவும். நன்குணர்ந்து சொல்லுக (குறள், 712).

That which is good
Abundance
Beauty
Health, welfare
Steadiness, stability
Good omen
Happiness
Thoroughly well

மெய் உயிர் இயைவு

ந்+அ=
ன்=ன்
க்+உ=கு

நன்கு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.