அம் - அகரமுதலியின் தேடல்

அம்

Noun (suff.) denoting
(a) instrument, as in நோக்கம், \'the instrument of seeing\'
(b) object of the action expressed by a verb, as in நீத்தம், \'what is swum over\'
(c) subject of the action expressed by a verb, as in எச்சம், \'what remains\'
கருவிப்பொருள்விகுதி: செயப்படுபொருள் விகுதி: வினைமுதற் பொருள் விகுதி.
(Suff.) of (vbl.) nouns, as in வாட்டம், \'withering\' தொழிற் பெயர் விகுதி.
(Suff.) of (abst.) nouns, as in நலம், \'goodness\'
பண்புப் பெயர்விகுதி.
Verb-ending denoting the 1st (pers. pl.), as in செய்தனம், பெரியம்
தன்மைப் பன்மை விகுதி.
A euphonic augment, as in புளியங்காய்
ஒரு சாரியை.
An expletive, as in போமினம்
ஓர் அசை. (சீவக. 1411.)
அழகு

அம்ம

கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278).
ஒரதிசயக் குறிப்பு. விதியினார்க்கியா னம்ம செய்கின்றதோ ரளவுண்டோ (கந்தபு. அசுரர்தோற். 14).
ஓர் உரையசைச்சொல். (நன். 437, மயிலை.)

An exclamation inviting attention
An exclamation of surprise or wonder Expletive adding grace to composition

அம்மா

பெற்றோரில் பெண்
தாய்
ஒவ்வொரு உயிருக்கும் ஆதாரம்

அம்மி

குழவி கொண்டு மிளகாய்,தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக்கல்

(rectangular)slab of stone with a stone roller used for grinding(spices etc)

அம்மை

சின்னம்மை தட்டம்மை போன்ற நோய்களைக் குறிக்கும் பொதுப்பெயர்
தாய்

generic name for viral disease such as chickenpox,measles etc
mother
future birth

அம்மோ

இரக்கக்குறிப்புச் சொல். (நாமதீப.)

An interjection expressing pity

அம்பு

வில்லின் நாணில் வைத்து எய்யப்படும் கூரிய முனை உடைய ஆயுதம்
ஏமுத லாய வெல்லாப் படைக்கலத்தொழிலு முற்றி (சீவக. 370).

arrow

அம்சம்

1.பல பகுதிகளாக அல்லது பன் முகமாக உள்ளவற்றில் குறிப்பிடப்பட்ட ஒரு பகுதி 2.எடுத்துக் கூறும்படியாக இருக்கும் கூறு அல்லது தன்மை 3.லட்சணம்,கச்சிதம்

1.aspect, detail, point 2.feature 3.(perfectly)suitable,fitting

அம்மவோ

ஓர் இரக்கக்குறிப்பு. அம்மவோ விதியே யென்னும் (கந்தபு. அக்கினி. 194).

An exclamation of pity

அம்மனே

ஒரு வியப்புக்குறிப்பு. உடைந்ததுவு மாய்ச்சிபான் மத்துக்கே யம்மனே (திவ். இயற்.3,28)

An exclamation of surprise