வ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
வண்ணார்

துணி வெளுத்தல்

வல்லவன்

ஆய கலைகளில் சிறந்தவன்

வண்டிப்பாதை

வண்டிகளின் போக்குவரத்துக்காகவென்று ஒதுக்கப்பட்ட சாலையின் பாகம்

வரவ

வரவு

வட்டில்

கிண்ணி

வாய்ப்புணர்ச்சி

வாயினால் புணர்தல்

விநாயகர்

பிள்ளையார்

வெட்டி

பயனின்மை
வெட்டுபவர், வெட்ட உபயோகிக்கும் கருவி
மண்வெட்டி
இலாமிச்சை
வழி
பழைய வரி வகை
வெட்டி வேர்

விடதரி

வெண்குந்திரி

வெள்ளைப்புலா

மட்புலந்தி

வேதிப் பொறியியல்

அறிவியல் மற்றும் வேதியியல் சார்ந்தவற்றோடு தொடர்புடைய ஒரு பொறியியல் துறையாகும். பலர் இதை தவறாக வேதியியலுடன் நேரடித்தொடர்புள்ளதாக கருதுவர். எனினும் வேதியியல் கூறுகள் வேதிப்பொறியியலின் ஒரு பகுதியே ஆகும்
வதிப் பொறியியல்

வேளாண்மை

வேளாண்மை அல்லது விவசாயம் என்பது உணவு மற்றும் வேறு உபயோகங்களுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், வீட்டுமிருக வளர்ப்பையும் குறிக்கும். விவசாயம் வீட்டு வளர்ப்புப் பிராணிகள் மற்றும் தாவரங்களின் உதவியைக் (பயிர்கள்) கொண்டு நாகரீகங்களுக்கு வழிவகுத்திட்ட முக்கியமான வளர்ச்சியாகும்.
உணவு உபரிகளை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள்தொகை அடுக்கு கொண்ட சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. விவசாயத்தைப் பற்றிய ஆய்வு என்பது வேளாண் அறிவியல் எனப்படுகிறது (இது சார்ந்த தாவரவளர்ப்பு என்பது தோட்டக்கலை எனப்படுகிறது).

வேதியியல்

வேதிப் பொருட்களைப் பற்றிய அறிவியல் துறை

வடமொழி

வடமொழி என்று குறிப்பிடப்படும் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்

வினைச்சொல்

செயலைக் குறிக்கும் சொல்

வரித்துறை

ஆயப்பகுதி

வேழம்

யானை

வளரூக்கி

உடலிலுள்ள உயிரணுக்களை அல்லது கலங்களைப் பாதிக்கக்கூடியதாகப் பிற கலங்களால் வெளிவிடப்படும் வேதிப்பொருட்கள் ஆகும்

வெள்ளி விழா

25 ஆண்டுகள்

வைர விழா

60 ஆண்டுகள்