வ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
வாழிய

வாழி. (நன். 168)
ஓர் அசைச்சொல். (நன். 440.)

வியாழவட்டம்

வானமண்டலத்தில் குரு ஒருமுறை சுற்றிவருங் காலமாகிய பன்னீராண்டு. (சங். அக.)
வியாழசக்கரம். (W.)
வியாழக் கிழமைதோறும். (W.)

வீழ்

தாலி நாண். அலர் முலையாகத்து . . . நெடு வீழ் தாழ (நெடுநல். 137).- part. ஓர் உவமவுருபு. (தண்டி. 33.)
ஒர் உவமவுருபு. (தண்டி.33).Swooping
வீழ்ச்சி. பருந்தின் வீழ்க்காடு (இறை. 4, பக் 57).
விழுது
நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா. 58).
விழு, விசும்பிற் றுளிவீழி னல்லால் (குறள், 16).

வலம்

சேனை
வலி. வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த (புறநா. 24).
வெற்றி. வலந்தரிய வேந்திய வாள் (பு. வெ. 9, 35).
ஆணை. நின்வலத்தினதே (பரிபா. 5, 21).
வலப்பக்கம். இடம்வல மேழ்பூண்ட விரவித்தேர் (திவ். இயற். 3, 73).
பிரதட்சிணம். மாலிருஞ்சோலை வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே (திவ். திருவாய். 2, 10, 8).
கனம். (அக. நி.)
மேலிடம். (திவா.)
இடம். (மலைபடு. 549, உரை.) (சூடா.)
ஏழனுருபு. கைவலத்தியாழ்வரை நின்றது (நன். 302, உரை).

வாடை

வடகாற்று

வடகாற்று

வடக்குத் திக்கில் இருந்து வீசும் காற்று

வெறி

இலாகிரி மயக்கம்
மூதறிவு

கால் என்ற பின்னவெண்ணின் குறி.

வர

அசைச்சொல். தழங்குமருவி என்னும் பாட்டுத்தொட்டு இதன்காறும்வர இப்பாட் டொன்பதும் (திருக்கோ.135, உரை)
அஞ்சிறைமடநாரைக்குப் பின்பு இவ்வளவும் வர (ஈடு, 2, 1, ப்ர)
வரை. பரத்துவமே தொடங்கி அவதாரங்களிலே வர (ஈடு, 3, 6, ப்ர).

வரை

கோடு
இரேகை. (சூடா)
எழுத்து. (பிங்.)
முத்துக்குற்றத் தொன்று. (S. I. I. ii, 78.)
மூங்கில். மால்வரை நிவந்த வெற்பின் (திருமுரு. 12)
மலை. பனிபடு நெடுவரை (புறநா. 6)
மலைச்சிகரம். மந்திவரைவரை பாய (பரிபா. 15, 39)
பக்கமலை. வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந (மதுரைக். 42)
கல். வரையம்பு காயெரிமாரிகளாய் (திருநூற். 34)
சிறுவரம்பு
நீர்க்கரை. (சூடா.)
எல்லை. வளவரை (குறள், 480)
அளவு. உளவரை (குறள், 480)
விரலிறையளவு
காலம். சிறு வரை (பு. வெ. 12, பெண்பாற். 17)
இடம். மலைவரை மாலை (பரிபா. 10, 1)
வரைவு,(adv.) வரைக்கும்.
மலை

வலிய

வலிமையுள்ள
பெரிய(adv.)

வலு

பலம்
சாமர்த்தியம்.
கனம். (யாழ். அக.)
எடைக்கு மேற்பட்டுள்ள நாணயம்
பெருங் கொசுகுவகை
எட்டென்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி
பற்று. (யாழ். அக.)
ஒருவகைப் பசை மருந்து. (யாழ். அக.)
பலமான
மிகுதியான; வலுகடினம்

வளர்

வளார். இளம் வளர் போல்வாள் (சேதுபு. கத்து. 4)
ஓருவமச்சொல். இழை வளர் நுண்ணிடை (தேவா. 991, 6)

விசும்பு

வானம்

விட

மிகவும். விடக்களியா நம் விழுநகர் (திருக்கோ. 297)
காட்டிலும். அதைவிட இது நல்லது

விதியுளி

முறைப்படி. விதியுளியாணை வேந்தனமர்ந்தனன். (பெருங். வத்தவ. 6, 84)
யாகம். (சூடா).
விவாகம். (யாழ். அக.)
தூதன். (யாழ். அக.)

விதிவத்து

முறையுடையது. (இலக். அக.)
முறைப்படி. விதிவத்துபசன்ன த்துவமாம். (வேதா. சூ. 18)

விருதா

வீண்
வீணாய். விருதாவலைந்துழலு மடியேன் (திருப்பு. 102)

வெட்டு

துண்டிப்பு. ஒரு வெட்டில் அந்த மரம் விழும்.
வெட்டுதலா லுண்டாம். புண் முதலியன.
எழுத்து முதலியன பொறிக்கை. கல்வெட்டுச் சாசனம்.
ஒரு வகைப் பழைய சிறு நாணயம். தன்னுடைய வெட்டென்றும் (பணவிடு. 143).
தையல்துணி வெட்டுகை
மயிர்கத்திரிக்கை
ஆட்டக்காயை நீக்குகை.
திடீரென வரும் அதிர்ஷ்டம். அவனுக்குத் திடீரென ஒரு வெட்ட வெட்டிற்று. இரண்டாயிர ரூபா கிடைத்தது.
பகட்டு
வஞ்சனை
நாயை ஓட்டும்போது கூறுஞ்சொல்

வெய்து

வெப்பமுள்ளது. சிறுநெறி வெய்திடை யுறாஅ தெய்தி (அகநா. 203)
வெப்பம். (மதுரைக். 403, உரை.)
வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம்
துக்கம். வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35, 3)
விரைவில். வேந்தன் வெருவந்து வெய்துகெடும் (குறள், 569)