வ - வரிசை 13 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
வஞ்சப் புகழ்ச்சி

புகழ்வது போல் இகழ்தல்.

வடிகட்டின

சுத்தமான : முழுமையான.

வண்ட வாளம்

உண்மை நிலைமை.

வதவத என்று

அளவிற்கு அதிகமாக.

வத்தலும் தொத்தலுமாக

மிகவும் மெலிந்த உடலமைப்புடைய.

வத்திப் பெட்டி

தீப் பெட்டி.

வத்தி வை

சண்டையை மூட்டு : கோள் சொல்.

வம்சாவளி

கால் வழி : மரபு வழி.

வம்பள

வீண் பேச்சு.

வம்புச் சண்டை

வலியச் சென்று போடும் சண்டை.

வம்பு தும்பு

வீண் சச்சரவு.

வயசுப் பெண்

பருவமடைந்த இளம் பெண்.

வயதானவர்

18 வயதிற்கு மேற்பட்டவர்.

வயிற்றலடி

பிழைப்பைக் கெடு.

வயிற்றுப் பிழைப்பு

உயிர் வாழும் பொருட்டு உழைத்துப் பொருளீட்டுதல்.

வயிற்றெரிச்சல்

பொறாமை : மனக் கொதிப்பு.

வயிற்றைக் கலக்குகிறது

அச்சத்தால் கவலை மிகுதல்.

வயிற்றைக் கழுவுதல்

அடிப்படைத் தேவை குறித்து உணவு கிடைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்.

வரலாறு காணாத

புதுமை மிளிர.

வரவர

நாளடைவில்.