ய - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
யானை

ஆனை
அத்தினி
அரசுவா
அல்லியன்
தும்பு
கரி
அஞ்சனம்
இருள்
இபம்
கஜேந்திரன்
கருமா
சாகசம்
சிந்துரம்
சூகை
தந்தாயுதம்
துருமாரி
தெட்டி
தெள்ளி
பஞ்சநகம்
பண்டி
பிள்ளுவம்
பிரளயம்
நூழில்
பகடு
வாரங்கம்
மதங்கம்
மத்தவாரணம்
மத்மா

யுகம்

கிரேதாயுகம் - 17,28,000 ஆண்டு
திரேதாயுகம் - 12,96,000 ஆண்டு
துவாபரயுகம் - 8,64,000 ஆண்டு
கலியுகம் - 4,32,000 ஆண்டு

யூகி

புத்திசாலி

யமதூதன்

யமனது தூதன்.
யமதூதி. (யாழ். அக.)

யாவச்சீவம்

வாழ்நாளுள்ள வரை. யாவச்சீவம் பிறருக்குழைத்தான்
சீவியவரலாறு எல்லாமும். அவனுடைய யாவச்சீவமு மறிவேன்.

யாவதும்

சிறிதும். யாவது மனங்கவல் பின்றி (பொருந. 94)
யாவும். யானைவெண் மருப்பினாலியற்றி யாவதும் (சீவக. 1201)

யாழ

ஒரு முன்னிலையசைச்சொல். யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் (கலித். 18).

யோனிப் பொருத்தம்

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண்
ஆண் நட்சத்திரங்கள்
பெண்ணுக்குப் பெண் யோனியாகவும்
ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம்

யாக்கை

தேகம்
மேனி

யானைக் கற்றாழை

ஆனைக் கற்றாழை

யுவன்

இளைஞன்

யோனி பேதம்

ஊர்வன -11
மானுடம் - 9
நீர் வாழ்வன - 10
பறப்பன _ 10
நடப்பன _ 10
தேவர் _ 14
தாவரம் _ 20 ஆக 84 நூறாயிரம்

யாழ்

ஒரு வகை இசைக்கருவி.
யாழின் வகைகள் :
பேரியாழ்
மகர யாழ்
சகோட யாழ்
செங்கோட்டு யாழ்

யா

மரம்

யோசனை

எண்ணம்
எண்ணக்கரு

யோனிக் கசிவு

வெள்ளைபடுதல்

யுக்தி

கையாளும் முறை