ம - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
மேதா விலாசம்

மேன்மை வெளிப்பாடு.

மேலோட்டம்

கருத்தின்றி.

மேம்போக்கு

உண்மையான கருத்தில்லாது.

மேல் வரும்படி

இலஞ்சம் : துணைவருவாய்.

மேஜர்

நன்கு புத்தி தெரிந்தவன்.

மெத்தென்று

மிருதுவாக.

மெத்தனம்

ஆர்வமின்மை.

மெய்க் கீர்த்தி

அரசனது வரலாற்றுச் செய்தி.

மெய்சிலிர்த்தல்

பரவசம் கொள்ளுதல்.

மெனக் கெட

இதற்கெனத் தனிக்கவனம் செலுத்தி.

மூக்கணாங் கயிறு

வாலிபத் துடிப்பை அடக்கும் வகையில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தல்.

மூக்கறு

அவமானப் படுத்து.

மூக்கறுபடு

அவமானப்படு.

மூக்கில் விரலை வை

ஆச்சரியப் படுத்தலைக் குறிப்பது.

மூக்கில் வேர்தல்

பிறர் இரகசியத்தை எப்படியோ தெரிந்து கொள்ளும் தன்மை.

மூக்குடைபடு

அவமானப்படு.

மூக்குப்பிடிக்க

அளவுக்கு அதிகமாக.

மூக்கும் முழியுமாக

அழகாக.

மூக்கு முட்ட

வயிறு நிரம்ப.

மூக்கைச் சிந்துதல்

நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் விட்டு அழுதல்.