ம - வரிசை 22 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
மாதவிடாய்

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிலக்கு
முதிர்ச்சியடைந்த கருமுட்டைகளின் வெளியேற்றம்

மாதவிலக்கு

மாதவிடாய்

மாதசூதகம்

மாதவிடாய்

மாசங்கம்

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்
மாதவிலக்கு

மூக்குத்தி

பெண்கள் மூக்கில் அணியும் அணிகலன்

மெட்டி

தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில்(முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) அணியும் வளையம்.
திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும்.
ஒரு ஆண் திருமணமானவனான? என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்வாள்.
காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது.

முகத்தலளவை

தானியம், திரவம் முதலியவற்றை முகந்தளக்கும் அளவை

மரக்கால்

முகத்தலளவைக்கருவி வகை; 1/12 கலம்; எட்டுப் படி
ஒரு மரக்கால் விரைப்பாடு
மரத்தால் செய்த பாதம்
ஆண்டு மழையின் அளவு. ஒருமரக்கால் மழை இவ்வருடத்தில்
திருமால் கூத்து வகை
துர்க்கைக் கூத்து - கூத்துப் பதினொன்றனுள் வஞ்சத்தால் வெல்லுதல் கருதிப் பாம்பு தேள் முதலியவாய் அவுணர் புகுதலையுணர்ந்து துர்க்கை அவற்றை யுழக்கிக் களைதற்கு மரத்தால் செய்த காலைக்கொண்டுஆடிய ஆட்டம்
உப்பளம்
ஆயிலிய நாள்
சோதி நாள்

மேல் காற்று

மேற்குத் திக்கில் இருந்து விசும் காற்று

முகநான்குடையான்

பிரமன்

மேலாயார்

பெரியோர்கள்
மேலானவர்

மணிப்பிரவாளம்

தென்னிந்தியாவில் சமஸ்கிருதமும், திராவிட மொழியொன்றும் கலந்து எழுதப்பட்ட ஒரு இலக்கிய நடையைக் குறிக்கும். மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும்

மாத்திரை

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும், விரலை நொடிப்பதற்கும் உரிய கால அளவு மாத்திரை எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது
மருந்து

மிடுக்கு

வலிமை
கம்பீரம், செருக்கு

முன்பள்ளி

சிறுவர் பாடசாலை

மதிய உணவு

மதிய(12.00 பி.ப - 2:00 பி.ப) வேளை உணவு

முகிழ்

முகிழ்த்து வரும் நிலை

மூகை

மணம் முகம் காட்டும் நிலை

மாழை

இளமை
அழகு
பேதைமை
மாமரம்
மாதர்கூட்டம்
உலோகம்

மீளுருவாக்கம்

உருவாக்கப்பட்ட ஒன்றை மீண்டும் அதேபோல உருவாக்குதல்