ம - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
முலைச்சுரப்பி

பாற்சுரப்பி
(பாதங்க நிலை சுரப்பி) பாலியல் உணர்வைத் தூண்டக் கூடிய நரம்பு முடிவிடங்களைக் கொண்டவை

முரண்நகை

முரண்பாட்டின் மூலம் உருவாகும் நகைச்சுவை. அதிகமும் விமரிசனத்தன்மை கொண்டது.

முரண்

எதிர்நிலை
ஒத்துழையாமை
முரட்டுத்தனம் = மிகுவலியுடன் கட்டயமாக ஒன்றை நிறைவேற்றுதல்

மழலை

வயதில் மிகவும் சிறிய குழந்தை
குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு; குதலைப் பேச்சு

மகள்

ஒருவரின் பெண் குழந்தை

மகன்

ஒருவரின் ஆண் குழந்தை

மத்தளம்

ஒரு வகை வாத்தியம்
பறை வகை

மொட்டு

மரம் செடி கொடிகளில் பூ மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை
மொக்கு, மொக்குள்
அரும்பு பெரிதாகி மலரும் முன் இருக்கும் நிலை
மூட்டும் இறுக்க நிலை

மொக்கு

பூக்கும் செடிகொடிகளில் மலர்வதற்கு முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. மலரும் முன் ஆனால் மலரும் நிலைக்கு நெருங்கிய நிலையில் உள்ள மலர் (மலரும் பருவத்தை அடைந்த அரும்பு)
மொட்டு
முட்டாள் (ஈழத்துப் பேச்சு வழக்கு)
முகப்பு காட்டும் நிலை

மகுட வாசகம்

திரு வாசகம்
வரவேற்ப்பு வாசகம்

மேளம்

நாகசுரம் ஒத்து தவல், தாளம் என்பவற்றின் இசைத் தொகுதி
தவில் வாத்தியம்
மேளகர்த்தா
இராக உறுப்பு
நல்ல சாப்பாடு
கவலையற்ற இன்ப வாழ்வு
கலவை மருந்து

மந்திரம்

மந்திரக் கலை

மறவனப்பு

இதிகாசம்

மீன்

நீரில் வாழும் உயிரினம். (காரணப்பெயர்-மின்னுகின்ற தன்மையால்)

மாமா

அம்மாவின் சகோதரன்

முல்லைத் திணை

காடும்
காடு சார்ந்த நிலமும்

மருதம்

வயலும் வயல் சார்ந்த நிலமும்

மறந்திசின்

மறந்தேன்

முற்று

முடிவு

மறுமொழி

பதில்