ம - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
முந்தை

பழைமை. (பிங்.)
முற்காலம். முந்தைத் தான் கேட்டவாறே (சீவக. 545)
முன்னோன். அந்தணர். . . தந்தை தாயென் றிவர்க்கு.. முந்தைவழி நின்று (பு. வெ. 9, 33).- adv.
முன். வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா. 10).

முன்பு

முற்காலம்
முன்னிடம். தோட்டியான் முன்பு துரந்து சமந்தாங்கவும் (புறநா. 14).
பழமை
மொய்ம்பு
மெய்வலி. முன்பாலுடல் சினஞ்செருக்கி (குறிஞ்சிப். 159).
பெருமை. (திவா.)
முன்னாக. தலையில் வணங்கவுமாங் கொலோ தையலார் முன்பே (திவ். திருவாய். 5, 3, 7).
முன்காலத்தல். முன்புநின்றம்பி வந்து சரண்புக (கம்பரா. வாலிவதை. 117).

முன்னடி

வீட்டின் முகப்பிடம் (W.)
சமீபம். அது முன்னடியிலே யிருக்கிறது.
விளிம்பு. கிணற்று முன்னடி.
பாட்டின் முதலடி.
முன்னடியான்
முன்பு. (யாழ். அக.)

முனாசிப்

தகுந்த
நியாயமான வரி. (R. T.)

மூய்

மூடுதல். (திவா.) பருமணன் மூஉய் (பரிபா.10,4)
நிரப்புதல். கயிறுகுறு முகவை மூயின (பதிற்றுப்.22)
நெருங்கிச் சூழ்தல். ஆயிரரு மங்கண் மூயினர்க ளண்ணலை (கந்தபு.சகத்திரவா. 18)
முடிதல். கதை மூய்ந்தது

மூன்றாவது

இரண்டாவதற்கு அடுத்துள்ளது
[வெற்றிலைபாக்குடன் சேர்த்துண்ணும் மூன்றாம் பொருள்] சுண்ணாம்பு
இரண்டாவதுக்கு அடுத்ததாக

மே

மேவு
மேம்பாடு
மேன்மை
மேல்
மாதம்

மேலால்

உயர்தரமான(adv.)
இனிமேல். மேலால் இப்படிச் செய்யாதே
மேலெழுந்தவாரியாக

மேலை

வருங்காலம்
மேலிடமான. மேலைத் தவலோகம் (திருவிளை. மலையத். 28)
மேற்கிலுள்ள. மேலைச்சேரி (நன். 402, உரை)
முந்தின. மேலைத் தவத்தாற் றவஞ்செய்யாதார் (நாலடி, 31)
அடுத்த. மேலைவருஷம்
முன்பு. மேலை நீள் விசும்புறையும் வெண்மதியம் (சீவக. 2238).

மாங்கலியம்

திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி
தாலி

மதி

நிலா

மதிப்ப

ஒரு உவமவாய்ப்பாடு. (தொல். பொ. 289).

மருள

ஓர் உவமவுருவு. (தொல். பொ. 286.)

மற்று

ஓர் அசைநிலை. (தொல். சொல். 264).
வினைமாற்றுக் குறிப்பு. (நன். 433.)
பிறிதுப்பொருட் குறிப்பு. (நன். 433.)
மறுபடியும். (W.)
பின்
மற்றப்படி

மறுப்ப

ஒர் உவம வாய்பாடு. (தொல்.பொ. 291.)

மன்

ஓர் அசை நிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1)
Affix indicative of
(a) future tense
எதிர்காலங்காட்டும் இடைநிலை. (தொல்.சொல். 1, சேனா. கீழ்க்குறிப்பு.) (சி. போ. பா.1, உரை.)
(b) ellipsis
ஒழியிசைக்குறிப்பு. கூரியதோர் வாண்மன் (தொல். சொல். 252, உரை):
(c) greatness, abundance
மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே (புறநா. 75):
(d) change or transformation
பிறிதொன்றாகைக்குறிப்பு. பண்டு காமெனின்று கயல்பிறழும் வயலாயிற்று (தொல். சொல். 252, உரை)
(e) Prosperity
ஆக்கக்குறிப்பு. திருநிலைஇயபெருமன்னெயில் (பட்டினப். 291):
(f) what is past and gone
கழிவுக்குறிப்பு. சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே (புறநா. 235):
(g) permanence
நிலைபேற்றுக்குறிப்பு. (நன். 432.)
A personal suffix, as in vaama
ஒரு பெயர்விகுதி.

மாதர்

அம்மா
தாய்

மாது

பெண்

மார்

ஓர் அசை. (தொல். எழுத். 186.)
பல்லோர் படர்க்கைவிகுதியுள் ஒன்று. (தொல். சொல். 209.)
ஒரு வியங்கோள் விகுதி. (நன்.)
ஒரு பன்மை விகுதி. தாய்மார் மோர் விற்கப்போவர் (திவ். பெரியாழ். 3, 1, 9).

மாள

ஒரு முன்னிலையசை. (தொல். சொல். 298
உரை.)