ம - வரிசை 10 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
மாட்டல்

காதணி.

மாந்திரீகம்

மந்திர வித்தை.

மாமிசப் பட்சிணி

பிற விலங்கின் இறைச்சியை உணவாகக் கொள்ளும் பிராணி.

மாமியார் வீடு

சிறைச்சாலை.

மாரடித்தல்

விருப்ப மில்லாத வேலை செய்தல்.

மார்வாடி

வட்டிக்குப் பணம் தருபவன்.

மாறி மாறி

அடுத்தடுத்து.

மகசூல்

தானிய விளைச்சல்.

மகத்தான

பெரிதான : நிரம்ப.

மகத்துவம்

பெருமை.

மகராசி

மகராசன் என்பதன் பெண்பால்.

மகரிஷி

முனிபுங்கவர்.

மகாசந்நிதானம்

சைவ மடத்தின் பீடாதிபதி.

மகாத்மியம்

மகிமை.

மகால்

அரண்மனை.

மகானுபாவன்

ஒருவரை ஏளனக் குறிப்பில் உரைப்பது.

மகோன்னதம்

உன்னதமானது.

மக்கர்

இயந்திரம் பழுதடைதல்.

மக்கல்

(பல நாள் வெயிலில் கிடந்து) கெட்டுப் போனது.

மங்களம் பாடுதல்

நிகழ்ச்சியை முடித்தல்.