ப - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பத்தி

வரிசை
வகுப்பு
செய்தித்தாள் முதலியவற்றின் நீளவாட்டுப்பகுதி
பாத்தி
முறைமை
அலங்கார வேலைப்பாடு
வீட்டிறப்பு
தூண்களின் இடைவெளி
யானையின் நடை வகை
கடவுள் முதலியோரிடத்திலுள்ள பற்று
வழிபாடு
ஒழுக்கம்
ஒரு தேரையும் ஒரு யானையையும் மூன்று குதிரைகளையும் ஐந்து காலாட்களையும் கொண்ட சிறு படைப் பிரிவு
நம்பிக்கை
அன்பு

பிரிவு

பிரிதல்
ஒற்றுமையின்மை
விட்டு செல்லுதல்

பாசி

நீர்ப்பாசி, கடற் பாசி
சிறு பயறு
கழுத்தணிக்கு உதவும் மணிவகை
பசுமையுடைய ஒன்று
மேகம்
வருணன்
யமன்
ஆன்மா
நாய்
கிழக்கு
சமைக்கை
மீன்பிடிப்பு, மீன்

பட்டியல்

விபரங்களை ஏதேனும் ஓர் அடிப்படையில் ஒன்றன் கீழ் ஒன்றாகத் தரும் வரிசை முறை

பாதுகாப்பு

காப்பு

பண்டுவம்

நோயினை குணமாக்க எடுக்கப்படும். மாற்று முறை

பாலியல்

உடலுறவு தொடர்புடையன

புள்ளோப்புதல்

சங்க காலத்தில் பெண்களின் பணிகளில் புள்ளோப்புதல் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. புள்ளோப்புதல் என்றால் பறவைகளை விரட்டுதல் ஆகும்.
(புள்ளினம்- பறவையினம்) . இதனை சங்ககால மகளிர் விளையாட்டாகவும் கொண்டிருந்தனர். தானியங்களை உண்ண வரும் கோழி உள்ளிட்ட புள்ளினங்களை, குளிர்,தழல்,தட்டை என்னும் கருவிகளைக் கொண்டு விரட்டினர். இந்தக் கருவிகளுக்குக் கிளிகடி கருவிகள் என்பது பெயராகும். இவ்வாறு புள்ளினங்களை விரட்டும் போது ஆலோ என்று சொல்லி விரட்டுவது மரபாகும்

பண்டை

பழமையான

படிப்பு

அறிவை பெருக்கும் செயற்பாடு அனைத்தும் படிப்பாகும்.

போதனை

அறிவு சார்ந்த வழிகாட்டல்

பாண்டை

துர்நாற்றம்
நாற்றம்

பாண்டைநாறி

கெட்ட நாற்றம் வீசுகின்ற பெண்

பாண்டன்

கெட்ட நாற்றம் வீசுகின்ற ஆண்

பாண்டல்

பாசி/பூசணம் பிடித்து நாறுதல்;
ஊசல்

பழைமை

பழமை

பம்பை

பம்பை தமிழர்களின் ஒரு இசைக்கருவி

பாண்டில்

வட்டம்
விளக்குத் தகழி
கிண்ணி
கஞ்சதாளம்
குதிரை பூட்டிய தேர்
இரண்டு உருளுடைய வண்டி
தேர்வட்டை
வட்டக் கட்டில்
கண்ணாடி
வட்டத்தோல்
நாடு
குதிரைச் சேணம்
எருது
இடபராசி
விளக்கின் கால்
பாண்டில் என்பது கஞ்சகக் கருவியாகும். தாளமிடுவதற்காகப் பயன்படுத்துவது. பாண்டில் என்பது வாத்தியத்தையும் கைத்தாளத்தையும் இசைத் தொடர்பாகக் குறிக்கும்.

புல்லாங்குழல்

புல்லாங்குழல் மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி வகையைச் சேர்ந்தது

பேரிகை

பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி
திருமணச் செய்தி
ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்தக் இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.