ப - வரிசை 27 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
போல

போல். (தொல். பொ. 291.)

பனிக்கட்டு

பனி தலையில் விழாதபடி துணியினால் கட்டுகை.

புறக்குடிப்பாயகாரி

கிராமத்தில் நிலவுரிமை பெறாத வந்தேறியான குடி. (M.N.A.D. 284).

பூதவிகாரம்

பஞ்சபூதங்களின் மாறுபாடு. பூதவிகாரப் புணர்பென்போர்களும் (மணி. 21, 100).

பலவழித்தோன்றல்

மருமகன். (சது.)

பழிப்புவமை

உவமேயத்தை உயர்த்தி உவமானத்தைப் பழிக்கும் அணி. (வீரசோ.அலங்.14) .

பத்திரவருடம்

நவவருடத்தொன்று

பலசிரேட்டம்

மாமரம்

பாரமேட்டி

ஒருவகைச் சந்நியாசி. சந்நியசியரிற் பாரமேட்டி யோகியென விருவருளர் (கூர்மபு. வரு.40.)

பிரமாம்பசு

கோமூத்திரம். (யாழ். அக.)

புள்ளிமான்

புள்ளிகளுடைய மான்வகை. புள்ளிமான் கலையை (புறநா. 152, உரை)
மான்வகை

பறந்தடி

கவலையால் துரிதப்படுதல் (J.)

பச்சைத்தவளை

தவளைவகை

பச்சைபாடி

காய்கறி யுதவுகை. (W.)

பச்சைவெட்டு

சுத்திசெய்யப்படாத பாஷாண மருந்து. (W.)
வெளிப்படை. (Colloq.)
பழுக்காத காய். (Colloq.)

பட்டுப்போதல்

உலர்த்துபோதல். மரம் பட்டுப்போயிற்று
சாதல். போரிற்பலர் பட்டுப்போயினர்

படல்

பனையோலையாலேனும் முள்ளாலேனும் செய்யப்பட்ட அடைப்பு. படலடைத்த சிறுகுரம்பை நுழைந்து புக்கு. (திவ். பெரியதி, 4, 4, 3)

பரி

மிகுதிப்பொருள் குறிக்கும் ஓர் இடைச் சொல். பரி புலம்பினரென (சிலப். 10, 226).

பரிசுத்தை

தூய்மையானவள்

பல்லவை

பலபொருள். பல்லவை நுதலியவகர விறுபெயர் (தொல். எழுத். 174).