ப - வரிசை 20 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பிற்பாடு

பின்னிகழ்ச்சி. பிற்பாட்டுக்கு நொந்து (ஈடு, 1, 5, ப்ர)
பிறகு. அதற் பிற்பாடு (மணி. 12, 78).

பினாத்து

பிதற்று.

பினாமி

ஒருவர் தன் சொத்தைப் பெயரளவில் மற்றொருவர் பெயரில் வைத்துப் பயனைப் பெறச் செய்யும் ஏற்பாடு.

பாடாவதி

மட்டமானது : பயனற்றது.

பாட்டுக்கு

தன் போக்கில்.

பாட்டி வைத்தியம்

அனுபவ வாயிலாக நோய்க்கு ஏற்றபடி செய்யும் மருத்துவம்.

பாதுஷா

ஓர் இனிப்புப் பண்டம்: முகலாய மன்னர்.

பாத்தியதை

தொடர்பு : பொறுப்பு.

பாம்பு விரல்

நடுவிரல்.

பாராமுகம்

பார்த்ததாகக் காட்டிக் கொள்ளாத தன்மை.

பாரியானது

பருத்த தேகம்.

பால் கோவா

ஓர் இனிப்புப் பண்டம்.

பால் மாறு

சோம்பல் படு.

பால்பல்

குழந்தைப் பருவத்தில் தோன்றும் பல்.

பாழாய்ப்போன

அருவருப்போடு குறிக்கும் தன்மை: பயனற்ற செயல்.

பாழாக்கு

வீணாக்கு

பகடைக்காய்

இருதிறத்தாரின் போராட்டத்தில் இடை நின்று தவிக்கும் ஒருவர்.

பகரமாக

பார்ப்பதற்கு கம்பீரமாக.

பகல் கனவு

நிறைவேறும் வாய்ப்பு இல்லாதது.

பகல் வேஷம்

நல்லவர் போன்று நடித்தல்.