ந - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
நின்று

எப்பொழுதும். நிறைபய னொருங்குட னின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா.15, 7)
ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச் சொல். (திருக்கோ.34, உரை)

நூவு

நீர்பாய்ச்சுதல். இடாக் கொண்டு நூவி (திருமந்.2878).

நூற்புறத்திணை

ஆகமத்தால் அமைந்த துணிபுரை. (தொன். வி.)

நைச்சி

காக்கை. (அக. நி.)
பாம்புவகை. (யாழ். அக.)
நைசியம்

நைசியம்

நோஞ்சான்(சங்.அக.)

நடுங்க

ஒரு உவமவுருபு. (தொல்.பொ.286)

நோக்க

ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286
உரை.)

A particle
(a) denoting excellence, as நப்பின்னை நக்கீரன் நக்கடகம். சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல். (நன், 420, மயிலை)
(b) expressing abundance, excess
மிகுதிப்பொருளுணர்த்தும் இடைச்சொல். நக்கரைந்துபோம் இத்தனை (திவ். திருநெடுந். 7, வ்யா. 59)

நந்த

ஒர் உவமவுருபு. (தொல். பொ. 291.)

நளிய

ஓர் உவமவுருபு. (தொல்.பொ.291)

நி

இன்மை, மறுதலைப்பொருளையுணர்த்தும் ஒரு வடமொழியுபசர்க்கம்
உறுதி, சமீபம், ஐயம், நிச்சயம், நிலைபேறு, பூர்ணம், மிகுதி இவற்றைக் குறிக்கும் ஓர் வடமொழியுபசர்க்கம்

நின்றை

அசைநிலை. (தொல்.சொல்.426)

நேர

ஒர் உவமவுருபு. (தொல்.பொ.291.)

நகத்

ரொக்கப்பணம் (C.G.)

நரிப்பாகல்

பாகல்வகை

நிகர

ஒர் உவமவுருபு. (நன்.367.)

நிகா

குறிப்பு. (W.)
சாக்கிரதை
கொழுப்பு.

நிரைகோடல்

போர்த்தொடக்கமாகப் பகைவர் பசுநிரையைக் கவர்கை. அங்ஙனம் நிரகோடலை மேவினாராக (சீவக. 1847
உரை)

நீறாகு

சாம்பராய்ப்போதல். அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்துப் படைதொட்ட மாறாளன் (திவ். திருவாய். 4
8
1)

நிலைமொழி

பதப்புணர்ச்சிக்கண் முதனிற்கு மொழி. நிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற்கு (தொல்.எழுத்.173)