ந - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
நக்கவாரப்பேச்சு

hநம்பிக்கையற்ற பேச்சு

நகர்படுதிரவியம்

நகரத்துக்கு உரியனவாகிய கண்ணாடி
பித்தன்
கருங்குரங்கு
காட்டானை
வேந்தன் என்ற ஐவகைப் பொருள்கள்

நகுதா

மாலுமி

நகைநட்டு

நகை
நாணயம்

நகையரல்

கிலுகிலுப்பை

நமிநந்தியடிகணாயனார்

நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு)

நமிபட்டாரகர்

நமி.(தக்கயாகப்.375
உரை)

நரகக்குழி

நரகம்

நற்கு

நன்மை. பண்டுகற்கறியாப் புலம்பெயர் புதுவிர் (மலைபடு. 392)
நன்றாக. அதுநற் கறிந்தனை யாயின் (புறநா. 35).

நன்கு

நல்லது. நல்லவையு ணன்கு செலச்சொல்லுவார் (குறள், 719)
மிகுதி. (அக. நி.)
அழகு. (சூடா.) பொருளின் விளைவு நன்கறிதற்கு (பு.வெ.1,4 பொளு).
சௌக்கியம். இமையவர் காதல் பெற்று நன்காவரக் காண்டியால் (கம்பரா.நகர்நீ.24).
நிலைபேறு, இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு (குறள், 513)
நற்சகுனம். நன்றி மதுரைப்பதியை நன்கொடு கடந்தார் (திருவாத.பு.மந்திரி.38)
மகிழ்ச்சி. ஆவிநன்குறா திருப்ப (திருவாலவா. 16, 6).
மிகவும். நன்குணர்ந்து சொல்லுக (குறள், 712).

நன்றாக

செம்மையாக. நன்றாக நால்வர்க்கு . . . அறம் உரைத்தான் (திருவாச. 12, 16)
ஒருவாழ்த்துத் தொடர். நன்றாக, குருவாழ்க, குருவே துணை.

நிகர்

ஒத்தல். கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை (தொல். பொ. 290)
மாறுபடுதல். தன்னொடு நிகரா வென்னொடு நிகரி (ஐங்குறு. 67).
விளங்குதல். தஞ்சேணிகர் காவின் (திருக்கோ. 183).

நனை

ஈர மாக்கு

நிலக்கரி

சீமைக்கரி

நிமித்தம்

சபிண்டீ கரணத்தில் இறந்தோர்க்குப் பிரதிநிதியாய் வரிக்கப் பெற்றவர்க்குரிய ஸ்தானம்
பொருட்டு. அதனிமித்தம் வந்தேன்
காரணம். புணர்தலும் புணர்தனிமித்தமும் (தொல். பொ.13, உரை).
நிமித்தகாரணம்.
சகுனம். நெறியி னல்கின புள்ளு நிமித்தமும் (சீவக. 2168).
அடையாளம்

நார்

ஒலி எழுப்பும் நாண்; (இதிலிருந்து எல்லாவித இயற்கை
செயற்கையான கயிற்றிழைகளுக்கு எல்லாம் பயன்படத் தொடங்கியது)

நொறுங்கு

பொடியாதல்; கற்கள் பட்டதினால் கண்ணாடிகள் நொறுங்கின
பின்னிரங்குதல். நொறுங்குண்ட மனம். (W.)

நுணுக்கம்

உலோபம். அவன் கை நுணுக்கம் உள்ளவன்.
பொன். (அக. நி. MSS.)

நோக்கு

கண். மலர்ந்த நோக்கின் (பதிற்றுப். 65, 7).
பார்வை. செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி, 298).
அழகு. நோயிகந்து நோக்குவிளங்க (மதுரைக். 13).
கருத்து. நூலவர் நோக்கு (திரிகடு. 29).
அறிவு. நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞர் (மதுரைக். 517).
பெருமை. நோக்கிழந்தனர் வானவ ரெங்களால் (கம்பரா. கும்பக. 328).
கதி. சொன்னோக்கும் பொருணோக்கும் (அஷ்டப். திருவரங்கக். தனியன், 2).
வினோதக்கூத்துக்களுள் ஒன்று. (சிலப். 3, 12, உரை.)
ஓசை முதலியவற்றால் கேட்டாரை மீட்டுந் தன்னை நோக்கச் செய்யும் செய்யுளுறுப்பு. (தொல். பொ. 416.)
விருப்பம். (யாழ். அக.)
ஓர் உவமவுருபு. (தொல். பொ. 287.)

நமரைவாழை

வாழைவகை