ந - வரிசை 2 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
நான்

தன்மையொருமைப் பெயர்

நீயிர்

முன்னிலைப் பன்மைப்பெயர். (தொல். சொல். 190.)

நீவிர்

நீங்கள். (நன். 287.)

நம்மள்

நம்மவர்கள்உண்மை நம்மள் ஜாதிக் குதவாதே (பஞ்ச.திரு முக. 1237.)

நாமள்

நாங்கள்.நாமளிருவரு மொரேவகுப்பி லாங்குகலை பயின்றோமல்லவா (பஞ்ச. திருமுக. 432).

நீ

முன்னிலையொருமைப் பெயர். நீயென வரூஉங் கிளவி (தொல்.சொல்.190)
முன்னிலை இடத்து ஒருமைப் பெயர்
நின்னை

நச்சு

சிறிய

நல்

நல்ல. கச்சையங்களி நல்யானை. (சூளா. அரசியற். 27).

நல்ல

நன்மையான.
மிக்க. இந்தத் தடவை நல்ல காய்ப்பு.
கடுமையான. நல்லவெயில்.

நாலா

பல. நாலாபக்கமும்.

நாளது

நடப்பு. நாளது வருஷம்.

நாளிது

See நாளது.

நாளைய

தற்காலத்துக்குரிய. இந்நாளைய மனிதர்
நாளுக்குரிய. பத்துநாளைய வேலை
மறுநாட்குரிய நாளையவேலை

நானா

பல. பிராரத்வ நானாவாகும் (கைவல்.தத்.97).

நொய்ய

அற்பமான, நொய்தி னொய்ய சொல் (கம்பரா, பாயி. 5).
வலியற்ற. நொய்ய புத்தி.
நுட்பமான. பல்கலநொய்ய மெய்யணிந்து (சீவக. 991).
மென்மையான. அனிச்சப் போதி னதிகமு நொய்ய (கம்பரா. கோலங். 14).

நிரவல்

சராசரி.

நகல்

படி

நத்தார்

திருப்பிறப்பு

நவரசம்

தொண்சுவை

நாடா

இழை