ந - வரிசை 15 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
நோக்குவர்மம்

நோக்குவர்மம்(ஹிப்னோதெரபி) என்னும் வார்த்தை மனிதனின் மனதில் ஒரு குறுகுறுப்பை உண்டாக்கும் ,இதற்க்கு காரணம் சினிமாக்களில் ஹிப்னோடிசம் பற்றி ஒரு ரகசியமான விஷயத்தை தெரிந்து கொள்ள உபயோகப்படுத்தினார்கள் .ஆனால் மனிதனின் உள்மனதில் புதைந்து கிடக்கும் பல நினைவுகள் கவலையாகவும் ,பயமாகவும் ,வியாதியாகவும் மாறி வாழ்க்கையை வேதனை நிறைந்த ஒன்றாக மாற்றி வருகின்றன.
மனிதின் வாழ்க்கை பிரச்சனைகள் பல இருந்தாலும் இந்த மனதில் உண்டாகும் பயம் போன்ற நுணுக்கமான எண்ணங்கள் விலக ஹிப்னோதெரபி உதவுகிறது.
உங்கள் மன வேதனை தீர சிகிச்சை பெற முடியும் .

நேர்

பலை

நாளங்காடி

நாள் அங்காடி

நுவல்

சொல்
பேசு

நூபுரம்

சிலம்பு

நாயக்கர்

தலைவன்,வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன், உயர்ந்தவன்

நடுவன்

நடுநிலையை வளங்கக்கூடியவன்
இயமன்
நீதிபதி
நியாயாதிபதி

நிலைபரப்பு

நிலத்தோற்றம்

நயனம்

கண்

நிலைத்திணை

செடிகொடிகள். புல் பூண்டு, செடி, கொடி, மரம் ஆகிய வகைகளை உறுப்புகளாகக் கொண்ட உயிரினம்.

நீலக்கதிர்

ஒரு தரநிலையாக்கப்பட்ட எண்மிய ஒளியியல்

நினைவகம்

ஒரு செயற்ப்பட்டையோ அல்லது தரவையோ நினைவில் சேமித்து வைத்திருக்கும் பகுதி.

நாற்றம்

மூக்கால் நுகர்பவற்றை நாற்றம் எனலாம்

நுகர்வோர்

பயனை பெறுபவர்
பொருளை வாங்குபவர்

நாதஸ்வரம்

தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால். பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
நாதசுரம்
நாகசுரம்
நாதசுவரம்
நாகஸ்வரம்
துளைக்கருவி

நகரா

நகரா என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். மிகப்பெரிய வடிவம் கொண்ட இந்த இசைக்கருவி பெரும்பாலும் கோவில்களில் நுழைவாயில் அருகே இடம்பெற்றிருக்கும்.

நமரி

நமரி என்பது ஒரு தமிழர் இசைக்கருவி. மேள தாளங்களோடு வாசிக்கப்படும் ஓர் ஊதுகருவி. இது யானையின் பிளிறல் போன்று ஒலி எழுப்பக் கூடியது. இதனை கொண்டாட்ட நிகழ்வுகளிலும் துக்க நிகழ்வுகளிலும் வாசிப்பர்.

நந்து

நந்துதல்;
ஆக்கம்
வளர்தல்,தழைத்தல்,விளங்குதல் என்ற பொருளும் உண்டு
அவிதல்,மறைதல், கெடுதல் என்றும் பொருள் உண்டு.

நிகண்டு

உரிச்சொற்பனுவல்
நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும்.
நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள் தரும்.
தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள்.

நட

நடக்க, நடந்து
நடத்தை