ந - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
நாரணன்

மனிதனாய் தோற்றரவு (அவதாரம்) எடுத்த திருமால் (நரன் ஆனவன் நாரணன்); இதை வடமொழியில் நீட்டி நாராயணன் என்றும் சொல்லுவது உண்டு.

நாரணி

நாரணனின் தங்கை

நாரி

நாரிகை

நாரிகை

மனிதனின் பெண்பால் (சொல் அமைப்பு பாகத மொழிகளின் அமைப்பின் படி இருக்கிறது)
இப்படிப் பட்ட சொற்கள் எல்லாம் அடிப்படையில் தமிழாய் இருந்து வடமொழிப் படி வழக்கிற்கு வந்தவை.

நாரதன்

இசை எழுப்புவன் (தொன்மங்களில் வரும் நாரதர் மட்டுமல்ல; சங்க இலக்கியங்களில்
இசைக்கருவிகளோடு வரும் பாணர்களுக்கான வடமொழிப் பதமும் கூட)

நரம்பு

வில்லில் கட்டிய
ஓசை எழுப்பும்
நாண்

நருமதை

ஓவென்று பேரிரைச்சல் போட்டுக் கொண்டு வேகமாக ஓடும் ஆறு. இதை மட்டுமே பண்டைக் காலத்தில் ஆண்யாறு என்று சொல்வதுண்டு. இதன் வேகமும்
நீரின் அளவும் அவ்வளவு பெரியதாம்.

நடையன்

வயல் நிலங்களில் மாடு அல்லது எருது

நிகழ்படம்

காணொளி

நட்பு

தோழமை - இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவு. வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.
சினேகம், கேண்மை

நறை

தேன்
கள்
வாசனை; நறுநாற்றம்
நறும்புகை
வாசனைப் பண்டம்
வாசனைக் கொடி வகை
நரை, குற்றம்

நீளம்

நெடுமை, நீட்டம்
தூரம்
தாமதம்

நீட்டு

இன்னும் கையை நீட்டு. நீட்டினால்
அத்தட்டினைப் பிடித்துவிடலாம்?

நீட்டலளவை

நீட்டி அளக்கும் முழம்
காதம் போன்ற அளவு

நிறுத்தலளவை

ஓர் இயற்பொருளின் (Physical Quantity) நிறையை அல்லது எடையைக் கணக்கிடும் முற
பழந்தமிழர் கழஞ்சு என்னும் அலகினைப் பயன்படுத்தினர்,
தற்காலத்தில் உலகளாவிய ஒரு அமைப்பால்(SI units) தகுதரப்படுத்தப்படுகிறது. அதன்படி எடைக்கு கிராம் அலகாகும்.

நற்சபை

நல்அவை

நவை

குற்றம்

நிறை

கற்பு

நற்றமிழ்

இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி
நடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கி
வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லதமிழ் எனலாம்

நோக்குவர்மம்

நோக்குவர்மம்(ஹிப்னோதெரபி) என்னும் வார்த்தை மனிதனின் மனதில் ஒரு குறுகுறுப்பை உண்டாக்கும் ,இதற்க்கு காரணம் சினிமாக்களில் ஹிப்னோடிசம் பற்றி ஒரு ரகசியமான விஷயத்தை தெரிந்து கொள்ள உபயோகப்படுத்தினார்கள் .ஆனால் மனிதனின் உள்மனதில் புதைந்து கிடக்கும் பல நினைவுகள் கவலையாகவும் ,பயமாகவும் ,வியாதியாகவும் மாறி வாழ்க்கையை வேதனை நிறைந்த ஒன்றாக மாற்றி வருகின்றன.
மனிதின் வாழ்க்கை பிரச்சனைகள் பல இருந்தாலும் இந்த மனதில் உண்டாகும் பயம் போன்ற நுணுக்கமான எண்ணங்கள் விலக ஹிப்னோதெரபி உதவுகிறது.
உங்கள் மன வேதனை தீர சிகிச்சை பெற முடியும் .