த - வரிசை 8 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தேசாந்திரம்

பல இடங்களுக்கும் விருப்பப்படி செல்லுதல்.

தேசாபிமானம்

நாட்டுப்பற்று.

தேசிக்காய்

எலுமிச்சை.

தேசியமயமாக்கு

அரசுடமையாக்கு.

தேவ ஆவி

பரிசுத்த ஆவி.

தேவகுமாரன்

இயேசு.

தேவலாம்

தேவலை : ஏற்கத் தகுந்தது.

தேன் மெழுகு

தேனடையிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமெழுகு.

தேனிரும்பு

கலப்பில்லாத மிக உறுதியான இரும்பு.

தேஜஸ்

ஒளி : முகத்தில் தோன்றும் பிரகாசம்.

தெற்கத்திய

தென் பகுதி சார்ந்த.

தெனாவட்டு

அடக்க மின்மை.

தென்படுதல்

கண்ணுக்குப் புலப்படுதல்.

தென்னம் பிள்ள

தென்னங் கன்று.

தூக்கிக்கொடு

தயங்காமல் கொடு.

தூக்கிச் சாப்பிட்டது

எல்லாவற்றையும் விட மிக அதிகமான செலவாகியது.

தூக்கி நிறுத்து

தளர்விலிருந்து ஒருவரை மேலேற்றி வாழச்செய்.

தூக்கியெறிந்து பேசு

மதிப்பின்றி பேசு.

தூக்கி வாரிப் போடுதல்

அதிர்ச்சியடைதல்.

தூக்குக் கயிறு

துன்பம் உடையது.