த - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தா

என்னிடம் அந்த பேனாவை "தா"
கொடு, கேட்பது

தூறு

புதர்

திராட்சைப்பழம்

கொடிமுந்திரி

தர்பூசணி

குமட்டிப்பழம்

தற்கலவி

தன்னால் தனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் இன்பம்

தாவரவியல்

தாவரங்களைப் பற்றி அறியும் பாடப்பிரிவு

தானுந்து

விலங்குகள் ஏதும் இழுத்துச் செல்லாமல் தானே உந்தப்பெற்று செல்லும் வண்டி. இவ்வண்டி நகர்வதற்கான உந்துவிசையை மின்சாரம் அல்லது வேதியியல் வினையால் பெறும் ஆற்றல் போன்ற ஏதேனும் ஒருவகையான ஆற்றல் தருகின்றது. மிகப்பெருபான்மையான தானுந்துகள் பெட்ரோலியம் (எரியெண்ணெய் அல்லது கன்னெய்) எரிப்பால் உந்தப்பெறும் உள்ளெரி பொறியால் இயங்குகின்றன (2010 ஆம் ஆண்டு)

துடுப்பாட்டம்

11 வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கிடையே ஆடப்படும்
மட்டைப்பந்து

திசைச்சொல்

தமிழ்நாட்டுக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து வந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள்

திங்கள்

நாட்களின் பெயர்களில் ஒன்று (திங்கட் கிழமை)
சந்திரன், நிலா, நிலவு, மதி
ஒரு கால அளவு, 28 தொடக்கம் 31 நாட்கள் கொண்டது.
சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம். (சந்திர மாதம்)
சூரியன் ஒவ்வொரு இராசி ஊடாகச் செல்வதற்கு எடுக்கும் காலம். (சூரிய மாதம்)

தெருக்கூத்து

வீதி நாடகம்

திருக்குறள்

திருவள்ளுவரால் எழுதப்பட்ட இரு வரிகளால் ஆன குறள்பா அல்லது பொய்யாமொழி என்றழைக்கப்படும் உலக பொதுமறை நூல்.

தொல்காப்பியம்

தொன்மையான ஒரு காப்பியம்/இலக்கண செய்யுள் இதை எழுதிய ஆசிரியர் தொல்காப்பியர்

தமிழ் வாசகன்

தமிழ் புத்தக/பத்திரிகை வாசிப்புப்பிரியன்

திவாகர்

கதிரவன்

தகர விழா

10 வது ஆண்டு

தசரத விழா

10வது ஆண்டு நிறைவு விழா

தசாப்த விழா

10வது ஆண்டு நிறைவு விழா

தொகைச் சொல் அகராதி

ஒரு சொல் பல விளக்கம்
ஒரு சொல் பல கூறுகள்

தொகைச் சொல்

பல கூறுகள் அடங்கிய ஒரு சொல்