த - வரிசை 21 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தவறவிடு

ஒரு பொருளை மறந்து வேறு ஒரு இடத்தில் விட்டுவிடல்
தொலைத்துவிடல்

தொண்சுவை

ஒன்பது வகையான சுவைகள்

தமயன்

தமையன்

தாய்

அன்னை
தாய்லாந்தில் பேசப்படும் மொழி.

தைப் பொங்கல்

தை மாதம் முதலாம் திகதி ஆதவனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சக்கரை சாதம் செய்து படைப்பார்கள்

தொகுப்பு

ஒன்றாகத் தொகுக்கப்பட்டது அல்லது மொத்தமாகச் சேர்க்கப்பட்டது:தொகுதி
குறிப்பிட்ட பொருள்களின் குவிப்பு.

தெரிவை

26 முதல் 31 வரை வயதுள்ள பெண்

தையல்

பெண்
அழகு

திரள்

கும்பல்,கூட்டம்
கொத்து

திரளை

முத்து
கோளம்

திரட்டுதல்

கூட்டம் சேர்த்தல்

திரணை

பந்து, கோளம் வடிவிலான பொருட்கள்

தெருள்

வயதுக்கு வருதல்

தெருளு

கூடுதல்

திரக்கு

கூட்டம்

தாங்கல்

நீர்நிலை
பாசனத்துக்கு உபயோகப்படும் இயற்கையேரி

துரவு

பெரிய கிணறு

தள்ளி

அன்னை

தலைகாட்டாதே

இங்கு வராதே

தலைமாடு

தலைப்பக்கம்