த - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தச்சன்

மரத்தில் வேலை செய்பவன்
மரங்கொஃ றச்சரும் (மணி. 28, 37)

தச்சன்குருவி

மரங்கொத்தி

தலையிலாக்குருவி

தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்குங் குருவிவகை

தரையில்லாக்குருவி

தலையிலாக்குருவி

தைலாங்குருவி

தலையிலாக்குருவி

தகைவிலாங்குருவி

தலையிலாக்குருவி
தகைவிலான் குருவிவகை

தூக்கணங்குருவி

தூக்கணம் + குருவி. தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை

தூக்கணம்

தூக்கு
தொங்கல்
உறி

தூதுணம்

தூக்கணங்குருவி

தணிக்கை

திரைப்படம் முதலியன ஒழுக்கவிதிகள், கட்டுப்பாடுகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து அவற்றை மீறும் பகுதிகளை நீக்கிச் சான்றிதழ் வழங்கல்
ஒரு நிறுவனத்தின் வரவுசெலவு, கணக்குவழக்குகள் ஒழுங்காக உள்ளனவா என அதிகாரபூர்வமாகச் சரிபார்த்தல்

தனயன்

மகன்

தீர்ப்பு

தீர்மானம்
முடிவு, தீர்ப்பான பேச்சு
வழக்கின் தீர்மானம்
தண்டனை
சங்கற்பம்
நிவர்த்தி
பரிகாரம்

தட்டம்

உணவு உண்ணும் தட்டு; உண்கலம்
தாம்பாளம்
பரந்த இதழையுடைய பூ
படுக்கை அறை; துயிலிடம்
படுக்கை
கச்சு
கை தட்டுகை

தனவந்தர்

செல்வத்தை உடையவர்
கொடை கொடுப்பவரையும் குறிக்கும்

தமையன்

அண்ணா

துவக்கம்

ஆதி

தானியம்

உழுந்து
நெல்
எள்
கடலை
கொள்ளு
அவரை
கோதுமை
துவரை
பயறு

திறம்பட

சரியாகவும் ஒழுங்காகவும் ஒரு வேலையை செய்தலை கூறுதல்

தொன்மம்

பழைய வரலாற்று பதிவுகள்

தரும சாஸ்திரம்

அறத்து பால்