த - வரிசை 19 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தினமானம்

தினந்தோறும்
கலியுகாதி தொடங்கிக் கணித்த தினசங்கியை

தினாதினம்

சிறந்த நாள்.தினாதினங்களில் சடங்கு செய்யவேண்டும்
பலநாட்களில். தினாதினம் கேட்கிறான்
தினந்தோறும். (Loc.)

தினாந்தரம்

தினந்தோறும்
இடைப்பட்ட நாள்

தெண்ணர்

அறிவிலிகள. தேசனைப்புகழார் சிலர் தெண்ணர்கள் (தேவா.1207, 1).

தீற்றிப்போடு

இரகசிய போதனைசெய்தல். (J.)

தனம்

செல்வம்

தொங்கட்டான்

தொங்கும் அணி
பதக்கம்
காதணி

தட்டிக் கழித்தல்

ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்

தலை குனிதல்

அவமானம் அடைதல்

தலை எடுத்தல்

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருதல்

தெட்டு

அபகரி
ஏமாற்று

தெரியும்

அறிய முடிகிறது

தீர்த்தம்

புனித நீர்
கோயில் குளங்களில் உள்ள நீரை தீர்த்தம் என்று அழைப்பதுண்டு

தீர்த்தம்

கங்கை,யமுனை,சரஸ்வதி,நருமதை,சிந்து,காவேரி,கோதாவரி,துங்கபத்திரை,சோணையாறு
கங்கை,யமுனை,கோதாவரி,நருமதை,சரஸ்வதி,காவிரி,குமரி,பாலாறு,சரயு

தொப்பி

கவிப்பு

தூசணம்

இழிமொழி
வசை

தமிழ்நாடு

தமிழ் வாழும் மாநிலம்

தகா

பசிதாகம்
மிக்க ஆசை
மோகம்
பொருளாசை

தாகம்

ஆசை
காமம்

தைத்திரம்

மீன்கொத்தி