ச - வரிசை 28 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சங்கம்

கூட்டுத்தாபனம்
கூட்டுறவு
1000000000000000

சிவிகை

பண்டைக் காலத்துப் போக்குவரத்துச் சாதனம். பாதுகாப்பாக மூடப்பட்ட இருக்கைகளுடன் அமைக்கப்படுவது. வசதிபடைத்தவர்களால் பயன்படுத்தப்படும் இச் சாதனத்தை பணியாட்களே தூக்கிச் செல்வர்.

சரிக்கட்டுதல்

ஒத்துப் போகச் செய்தல்

சுக்குச்சுக்காய்

பல துண்டுகளாக

செவி சாய்த்தல்

உடன்படுதல்
இணங்குதல்
இசைதல்

சிரி

சிரித்தல்
ந‌கைப்பு

சோகு

பேய்
பிசாசு

சைக்கிள்

ஈருருளி

சணாய்த்தல்

காமங்கொள்ளுதல்

சக்கிலிக்குருவி

மீன்கொத்தி

சிச்சிரம்

மீன்கொத்தி

சிச்சிலி

மீன்கொத்தி

சூறைக்குருவி

சோள வயலிற்கூட்டங்கூட்டமாகக் காணப்படும் குருவிவகை

சேர்மம்

ஒன்றுக்கும் மேற்பட்ட தனிமங்களின் இணக்கத்தினால் உருவாகும் கூட்டமைப்பு ஆகும்

சூதகம்

பிறப்பு
மாதவிடாய் விலக்கம்; தீட்டு
பந்துக்களின் பிறப்பிறப்புக்களிற் காக்கும் தீட்டு
சாவு நிகழ்ந்த வீட்டிற்குட் செல்லுதல், சவத்தைத் தொடுதல்,தீண்டத்தகாதவரை நெருங்குதல் முதலிய அசுபச்செய்கைகளால் நிகழும் தீட்டு
மாமரம். சூதகம் வாழைகள் சூழ் (திவ். பெரியதி.4, 2, 1).
சிறு கிணறு
முலைக்கண்
பழமை

சர்ச்சை

சச்சரவு
வாதம்
விவாதம்

சொல்லாடல்

விவாதம்
சர்ச்சை
தக்கம்
தருக்கம்
ஒரு பட்சத்தை எடுத்துக்கூறுதல்

சீட்டாட்டம்

32 சீட்டுகளுடன் இருவர் விளையாடும்

சட்டாட்டம்

சண்டியாட்டம்
வாதாட்டம்
சண்டியாட்டம்

சகோதரம்

உடன்பிறப்பாளர்