ச - வரிசை 21 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சோளக் கொல்லை பொம்மை

தினைப் புனத்தில் துணியால் சுற்றப்பட்ட ஒரு வகை வடிவம்.

சோனி

மெலிந்தவன் : வலுவற்றவன்.

சொகுசு

வசதி நிரம்பியது.

சொக்குப் பொடி

மயங்கச் செய்தல்.

சொச்சம்

கொஞ்சம் அதிகம் : மீதி : பாக்கி.

சொட்டைச் சொள்ளை

அடுத்தவர் மீது காணும் குற்றம் குறை.

சொர்க்க போகம்

வசதியும் சுகமும்.

சொல்லிக்கொடுத்தல்

அறிவுரை கூறுதல் : பிறரை தூண்டி விட்டுக் கலகத்தை ஏற்படுத்துதல் : வியாபாரத்தில் விலையைச் சொல்லிக் குறைத்துக் கொடுத்தல்.

சொல்லிக் கொள்ள

பெருமை என்று கருத.

சொள்ளு

எச்சில் : உமிழ் நீர்.

சொஸ்தமாக்கு

நோயைக் குணமாக்கு.

சைத்தான்

கடவுளின் எதிரியாகவும் தீய சக்தியாகவும் கருதப்படும் ஆவி.

சைவப் பழம்

சிவ பக்தியால் திளைத்து உடம்பெங்கும் விபூதி தரித்த தோற்றப் பொலிவு.

சகட்டுமேனிக்கு

ஒட்டு மொத்தமாக
சகட்டடியாக

சங்கல்பம்

தீர்மானம் : மன உறுதிப்பாடு.

சடாரென்று

வேகமாக.

சட்டென்று

விரைவாக.

சட்னி

சிற்றுண்டிக்குரிய தொடுகறி.

சதக்கென்று

வேகமாகப் பதியுமாறு.

சபாஷ்

பாராட்டுச் சொல்.