க - வரிசை 99 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
காளத்தி

சீகாளத்தி என்னுஞ் சிவதலம்
மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டுகொண்டு (பெரியபு. கண்ணப்ப. 100).

கொப்பறா

கொப்பரை

கொஞ்சம்

சிறிது

கிரந்தக்காரன்

அதிகப்பிரசங்கி

கிளை

இபம்

கொள்ள

இன்னும் கொள்ளக்கொடு.
நிரம்ப. உணவு கொள்ளக் கிடைத்தது
காரணப்பொருளிலேனும் காலப்பொருளிலேனுமுள்ள செயவெனெச்சத்துடன் கூடிவருந் துணைவினை. நான் போகக்கொள்ளக் காரியம் நடந்தது. நான் வரக்கொள்ள மழைபெய்தது.

கவர்வு

கவர்ச்சி

கம்பை

சட்டம்

கவாட்டம்

கவாட்சி
வட்டச்சாளரம்

கிடிகி

சன்னல்

குப்பை

கழிவு

கச்சான்

மேல் காற்று

குடக்கு

மேற்கு

கப்பணம்

காப்பு நாண்

கருக்கு

கருகச்செய்

கங்கு

எல்லை

கெடாரம்

கடிகாரம்

கடாரம்

கடிகாரம்
கடாகம்

கடகம்

வளையல்

குருது

நெய்