க - வரிசை 98 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
குமுக்கு

மொத்தம்

கீள்

கூறு

கருத்தடை

பிறப்பு கட்டுப்பாடு

கிருமி

புழு

கீரைப்பாம்பு

நாக்குப்பூச்சி
கீரிப்பாம்பு

கீடமணி

மின்மினி

கீடம்

புழு

குணகு

வளை
குணங்கு

குடவு

வளை

குஞ்சிதநடம்

நடனம்

கடிசு

கடுமை

கறி

அசைவ சாப்பாடை கறி என்று அழைப்பார்கள்

கச

கை

The compound of க் + அ, secondary consonantal symbol ka.
ஒன்றென்னுமெண்ணின் குறி.
காந்தாரமாகிய கைக்கிளையிசையி னெழுத்து. (திவா.)

கண்

விழி. (தொல். எழுத். 7.)
கண்ணோட்டம். கண்ணின்று பெயர்ப்பினும் (தொல். பொ. 150).
பீலிக்கண். ஆயிரங்கணுடையாய்க்கு (கம்பரா. பம்பை. 27).
தேங்காய் பனங்காய்களின் கண்.
முலைக்கண்.
துவாரம். கால்வாய்த் தலையின்கண்கள் (பாரத. முதற். 72).
புண்ணின்கண்.
மரக்கணு. மரக்கண்ணோ மண்ணாள்வார் கண் (முத்தொள். பெருந்தொ. 634).
முரசு முதலியவற்றில் அடிக்குமிடம். கண்மகிழ்ந்து துடிவிம்ம (பு. வெ. 2, 8, கொளு).10. Bamboo
மூங்கில். (திவா.)1
பெருமை. (திவா.)1
ஞானம். கள்ளொற்றிக் கண்சாய்பவர் (குறள், 927).1
உணர்த்துவது. சொன்னசிவன் கண்ணா (சி. போ. 5, 2, 1).1
பீசம். நாதமாஞ் சத்தியதன் கண்ணாம் (சி. போ. 9, 3, 3).1
பாயின் நெட்டிழையாகிய நூல். (G. Tn. D. i, 220.)1
இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058).1
முன்பு. கண்ணின்றிரப்பவர் (குறள், 1055).1
பற்றுக்கோடு. கண்ணன் கண்ணல்ல தில்லையோர் கண்ணே (திவ். திருவாய். 2, 2, 7).1
உடம்பு. பொன்கட்பச்சை (பரிபா. 3, 82). -part.
ஏழுனுருபு. (நன். 302.)
ஓர் அசை. மீன்கணற்று (புறநா. 109, 10).
உபசர்க்கம். களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை (கலித். 101, 35).

கல்லெனல்

ஒசைக்குறிப்பு. கல்லேன் பேரூர் (சிலப்12, 12).

கவின்

அழகுபெறுதல். நாடகம் விரும்ப நன்னலங் கவினி (மணி. 18, 58)
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு (திருமுரு. 29).

காசா

சொந்தம்
அசல்விலை
மிகவுஞ்சிறந்த

காண்

காட்சி. காண்பிறந் தமைந்த காதல் (கம்பரா. திருவடிதொழு. 70).
அழகு. காண்டக...முகனமர்ந்து (திருமுரு. 250) முன்னிலையில்வரும் ஓர் உரையசை. துவ்வாய்காண் (குறள், 1294).

காலை

பொழுது
வாணாள். நோகோயானே தேய்கமா காலை (புறநா. 234).
தருணம். காலைய தறிந்தனை (கந்தபு. திருவவ. 14).
முறை. முக்காலைக் கொட்டினுள் (நாலடி, 24).
விடியற்காலம். காலைக்குச் செய்தநன்றென்கொல் (குறள், 1225)
சூரியன். காலை யன்ன சீர்கால் வாய்மொழி (பதிற்றுப். 21, 4)
பகல். எல்லியிது காலையிது ெ்வன்ப தறிகல்லாள் (சீவக. 1877).
பள்ளியெழுச்சி முரசம். மேல்வந்தான் காலைபோல் ... துயிலோ வெடுப்புக (கலித். 70)
காலம்பெற. (W.)
பொழுதில். அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் (நாலடி, 68).