க - வரிசை 111 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கடியன்

கடியவன்

குறிப்பயஞ்சில்லியல்

மின்னியல் தொடர்புடையது

கனி

பழம்

கணிதவியல்

கணிதம்

கணக்கியல்

நிதியியல்
வர்த்தகம்

குறிகையியல்

சமிக்கைகள் தொடர்புடைய

கைமா

யானை

கலபம்

யானை

கிஞ்சித்தேனும்

சிறிதும்; கிஞ்சித்தேனும் இரக்கமில்லாதவன்

கிஞ்சிதம்

கிஞ்சித்து

கொஞ்சங்கொஞ்சமாய்

சிறிது சிறிதாய்

கள்ளன்

பிறர் பொருட்களை அவருக்கு தெரியாமல் கவர்ந்து கொள்பவன்.
திருடன்

கனியாளன்

இனியவன்

கலைஞன்

கலைகளில் சிறந்தவன்

கணேசுரர்

நந்தி
மாகாளர்
பிருங்கி
கணபதி
இடபம்
கந்தர்
பார்வதி
சண்டர் என்னும் சிவகணத் தலைவராவர்

கரணம்

மனம்,வாக்கு,காயம் (உடல்)
மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்

கருமேந்திரியம்

வாக்கு
பாதம்
பாணி (கை)
பாயுரு (மலவாய்)
உபத்தம் (சிறுநீர் கழித்தல்)

கிரகசமித்து

எருக்கு
முருக்கு
கருங்காலி
நாயுருவி
அரசு
அத்தி
வன்னி
அறுகு
தருப்பை

கிரகதான்யம்

கோதுமை
பச்சரிசி
துவரை
பச்சைப்பயறு
கடலை
மொச்சை
எள்
உளுந்து
கொள்ளு

கிரிகள்

இமயம்
மந்தரம்
கயிலை
விந்தம்
நிடதம்
ஏமகூடம்
நீலம்
கந்தமாதனம்