க - வரிசை 104 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கூழைக்கும்பிடு

மரியாதைகாட்டுவதுபோல்நடித்தல்

கடுக்காய் கொடுத்தல்

ஏமாற்றி தப்புதல்

கண்ணும் கருத்தும்

முழுக் கவனத்துடன்

கரி பூசுதல்

அவமானம் ஏற்படுத்துதல்/மதிப்பைக் கெடுத்தல்

கரைத்துக் குடித்தல்

ஒரு கவலையை அல்லது துறையைப் பற்றி முழுக்க படித்து அறிதல்

காது குத்துதல்

சாமார்த்தியமாகப் பொய் சொல்லுதல்

கிணற்றுத் தவளை

தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது எதையும் அறியாதவன்

குரங்குப் பிடி

பிடிவாதம்/பற்றிக்கொண்டதைச் சிறிதும் விட்டுக்கொடுக்காத தன்மை

கை கழுவுதல்

உதவி செய்வதிலிருந்து அல்லது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுதல்

கை கூடுதல்

ஒரு காரியம்/ செயல் நிறைவேறுதல்

கையும் களவுமாய்

குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே

காமினி

பெண்
மந்திரம்

கேலி

பகிடி
ஏகடியம்
எள்ளல்

கஸ்டம்

துன்பம்
கடுமை

கட்சி

அணி

கங்கணம்

உறுதி (பூணல்)
கடகம்

காந்தள்

கார்த்திகைப்பூ

காமக்கடப்பு

காமமிகுதி

காமப்பைத்தியம்

அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம்
காமமிக்கவன்

காமாந்தகன்

காமத்தால் விவேகமற்றவன்