க - வரிசை 1 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கொட்டகை

தொழுவம்; பந்தல் விசேடம்

கயம்

கயமை; கீழ்மை
கீழ்மக்கள்
பெருமை
மென்மை
இளமை
நீர்நிலை, வற்றாத குளம்
நீர்
கடல்
ஆழம்
அகழி

குருதிப்புனல்

இரத்த ஆறு.
தன் இரத்தத் தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. (தொல். பொ. 59, உரை.)
பெரும் வன்முறை நிகழ்வுகள், போர்க்களங்கள் போன்றவற்றை வர்ணிக்க இச்சொல் பயன்படுகிறது.

குதி

திடீரென எழும்பு; திடீர் அசைவு

கங்காணி

கண்காணி, கண்காணிப்பவர், மேற்பார்வையாளர், மேல்விசாரணை செய்பவர்

காதலர்

காதலிக்கும் இருவரை காதலர் என்று அழைப்பர்,
காதலன் மற்றும் காதலி இருவரையும் பொதுவாக அழைக்கும் பெயர்.

காதலன்

அன்பிற்குரியவன், வயவன் ,நயவன்,அன்பன், கண்ணாளன், காந்தன்

காதலி

(பெ.)அன்பள், கண்ணாட்டி, காந்தை,வயவள்
(வி.) காதல் செய்

கூளம்

குப்பை, கஞ்சல்

கழை

நட்பினால், பிறரின் வருத்தம்|வருத்தத்தைத் தாங்குதல்
மூங்கில் குழாய்

காரிகை

பெண்

கொரோனாவைரசு

கொரோனா நச்சுயிரி பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும் ஒரு தீநுண்மி ஆகும். இவை பசுக்கள், பன்றிகளில் வயிற்றுப்போக்கையும், கோழிகளில் மேல் சுவாச நோயையும் உண்டாக்கும். இத்தீநுண்மிகள் மனிதர்களுக்கு சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இத்தொற்றுகள் பெரும்பாலும் மிதமானவையாக இருந்தாலும் அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானவையாக உள்ளன.