ஓ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஓலக்கமண்டபம்

சங்கமண்டபம்.

ஓலைக்கண்

ஓலைச்சட்டம்.

ஓலைக்காந்தள்

ஓலைத்துகள்.

ஓலைக்கிளிஞ்சில்

ஒருவிதசங்கு.

ஓலைக்கூடு

ஓலைக்குடை.

ஓலைச்சுருள்

செந்திரிக்கம்.

ஓலைதீட்டும்படை

எழுத்தாணி.

ஓலைப்பூ

தாழைப்பூ.

ஓலைமுத்திரை

ஒருமுத்திரை.

ஓலைமூங்கில்

ஒருமூங்கில்.

ஓலைவாங்குதல்

சாதல்.

ஓவென்றவெளி

பெரியவெளி.

ஓரினச்சேர்க்கை

see தற்பால்சேர்க்கை

ஓட்டம் பிடி

தப்பிச் சென்று விடு.

ஓட்டாண்டி

நல்ல நிலையிலிருந்து கெட்டழிந்து : வறிஞன் ஆனவன்.

ஓட்டைக்கை

எளிதாக செலவு செய்யும் தன்மை.

ஓட்டையுடைச்சல்

பயன் படுத்த முடியாத வீட்டுச் சாமான்கள்.

ஓட்டை வாய்

எல்லாவற்றையும் பிறரிடம் கூறும் தன்மை: இரகசியத்தைக் கட்டிக் காத்தவன்.
எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் சொல்லிவிடுகின்ற இயல்பு

ஓரம் கட்டு

விலக்கு.

ஓரளவு

சிறிது : கொஞ்சம்.