ஒ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஒருத்தன்

ஒருவன்.

ஒருநெல்லுப் பெருவெள்ளை

ஒருவகைநெல்.

ஒருநேரம்

அகாலம்.

ஒருபவம்

ஒருபிறப்பு.

ஒருபுடையொப்புமை

ஏகதேச வுமம்.

ஒருபொருள்

எதார்த்தம்
கடவுள்.

ஒருபொழுது

ஒருகாலம்
ஒருசந்தி.

ஒருப்பாடு

சம்மதம்.

ஒருமட்டம்

ஒரேசரி.

ஒருமரம்

அழிஞ்சில்
செம்மரம்.

ஒருமாதிரி

ஒருவிதம்
குணம்வேறுபட்ட
அவன் ஒருமாதிரி மனிதன்

ஒருமிக்க

ஏகமாய்.

ஒருமிப்பு

இசைவு
ஒன்றிப்பு.

ஒருமுறை

ஒருதடவை.

ஒருமைப்பாடு

ஒன்றிப்பு.

ஒருமைமகள்

பதிவிரதை.

ஒருலாகை

ஒருவகை.

ஒருவழிமேவல்

ஓரவாரம்.

ஒருவிசை

ஒருமுறை.

ஒருவேளை

ஒருபொழுது
ஒருக்கால்