ஒ - வரிசை 5 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஒதுக்கிடம்

புகலிடம், மறைவிடம்.

ஒதுக்குக்குடி

இரவற்குடி.

ஒதுக்குப்படல்

காற்றைக் காக்கும்பாடல்.

ஒதுக்குப்பாடு

மறைவு.

ஒதுக்குப்புறம்

ஒதுக்குப்பாடு.

ஒதுங்கிடம்

புழக்கடை.

ஒதுங்குதல்

ஒதுங்கல்.

ஒதுங்குபுறம்

புறம்போக்கு.

ஒத்தமொழி

ஒருசாரி, ஒன்றுபோல.

ஒத்தறுத்தல்

தாளம்போடல்.

ஒத்துப்பார்த்தல்

சரிபார்த்தல்.

ஒத்துவிடுதல்

இணங்கிவிடுதல், ஒப்பித்து விடுதல்.

ஒப்பணி

ஓரலங்காரம்.

ஒப்பம்பண்ணுதல்

ஒப்பனையாக்கல்.

ஒப்பாசாரம்

உடன்படிக்கை, ஒத்த ஒழுக்கம், கண்சாடை, மாரீசம்.

ஒப்பின்முடித்தல்

ஒருயுத்தி.

ஒருகட்பகுவாய்ப்பறை

பதலை.

ஒருகண்டசீர்

எப்போதும்.

ஒருகண்ணுக்குறங்கல்

ஒருமுறையுறங்கல்.

ஒருகலை

திதி.