ஒ - வரிசை 4 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஒட்டுக்கடுக்கன்

சிறுகடுக்கன்.

ஒட்டுக்கு

ஒருமிக்க.

ஒட்டுக்குஞ்சு

சிறுகுஞ்சு, பேன்குஞ்சு.

ஒட்டுக்குடி

ஒதுக்குக்குடி.

ஒட்டுக்கும்

முழுதும்

ஒட்டுக்கேட்டல்

ஒளித்து விசேஷங்கேட்டல்.

ஒட்டுக்கொடுத்தல்

இடங்கொடுத்தல்.

ஒட்டுச்செடி

ஒட்டொட்டி.

ஒட்டுத்தீட்டுக்கலப்பு

உதிரக் கலப்பானஉறவு.

ஒட்டுத்தையல்

ஒருதையல்.

ஒட்டுப்பார்த்தல்

உளவுபார்த்தல்.

ஒட்டுப்புதவம்

இரட்சதம்.

ஒட்டுப்புல்

ஒருபுல்.

ஒட்டுப்போடல்

சமயம்பார்த்தல்.

ஒட்டுரிமை

உடந்தை.

ஒட்டுவியாதி

தொத்துநோய்.

ஒட்டுவேலை

ஒட்டுவைக்கிறவேலை.

ஒட்டுறுவு

உரித்துறவு.

ஒண்ணாதது

ஒவ்வாதது.

ஒண்ணாப்பு

இயலாப்பு.