ஒ - வரிசை 2 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஒல்லட்டை

ஒல்லியானவன்.

ஒழுங்கை

ஒழுங்கியவழி.

ஒளிவு

ஒளி
மறைவிடம்

ஒளிறு

பிரகாசம்.

ஒறுவாய்

ஒடிந்தவாய்.

ஒளி

மின்காந்த அலைநீளத்தைப் பொருத்து சிவப்பு மஞ்சள்,பச்சை, நீலம் என கண்ணுக்குப் புலனாகும் ஒளி பல நிறம் உடையதாகவும் இருக்கும், அல்லது அவை எல்லாம் சேர்ந்த்து வெள்ளை ஒளியாகவும் இருக்கும்.
ஒள் என்றாலும் ஒளிர்வு அல்லது ஒளி.
விளக்கு
பிறருக்கு உதவுபவன்
அறிஞன்

ஒளி

மறைத்து வை; எளிதாகக் கண்டுபிடிக்க இயலாதவாறு மறைத்து வை

ஒய்யாரம்

பெண்களின் நளினம்.

ஒட்டுத்திண்ணை

வீட்டின் முன் வாசலை ஒட்டி அமைக்கப்படும் சிறிய திண்ணை.

ஒலியியல்

மொழியொலியியல்

ஒவ்வொன்று

ஒன்றுவீதம்.
சில. அந்த எண்களில் ஒவ்வொன்று விடப்பட்டிருக்கும்.

ஒய்

யானையைப் பாகர்வையும் ஆரியமொழி. (சிலப். 15, 48, உரை.)

ஒளவையோ

அம்மையோ. ஒளவையோவென்று போக (சீவக. 1271).

ஒருவர்க்கொருவர்

பரஸ்பரம். ஊனுமுயிரு மனையா ரொருவர்க்கொருவர் (கம்பரா. வரைக். 69).

ஒரானொரு

ஏதோ ஒன்று. ஒரானொருநாளில் (குருபரம். 217, பன்னீ.).

ஒரே

ஒன்றேயான. அவனுக்கு ஒரேகுமாரன்

ஒன்றுவிட்ட

உறவு முறையில் ஒரு தலைமுறை விட்ட.

ஒருபடி

ஒருவகை.
ஒரேவிதம். ஒரு படிப்பட்டிருக்குமவனை (ஈடு, 6, 8, 4). ஒருவாறு.

ஒருபுடை

ஏகதேசம். ஒருபுடையுவமை.- adv. On one side
ஒரு பக்கமாய். ஒருபுடை பாம்புகொளினும் (நாலடி, 148).

ஒருமட்டு

ஒத்த அளவு. ஒருவாறு. காரியம் ஒருமட்டுமுடிந்தது.