ஐ - வரிசை 3 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஐம்புலத்தடங்கான்

கடவுள்.

ஐம்புலநுகர்ச்சி

பஞ்சேந்திரியாநுபவம்.

ஐம்புலம்வென்றோர்

முனிவர்.

ஐம்புலவிடையன்

இல்வாழ்வான்.

ஐம்புலன்விழையான்

துறவி.

ஐம்புலன்வென்றோன்

அருகன், பஞ்சபட்சிப் பாஷாணம்.

ஐம்பூதம்

பஞ்சபூதம்.

ஐம்பூதம்

நிலம்
நீர்
நெருப்பு
காற்று
வானம்

ஐம்பூதலிங்கம்

பஞ்சபூதலிங்கம்.

ஐம்பூதியம்

பஞ்சபூதியம்.

ஐம்பொறியடக்கான்

இல்வாழ்வான்.

ஐம்பொறியடக்கி

துறவி.

ஐம்முகப்பிரமன்

பூருவபிரமன்.

ஐயக்கண்சூலை

ஒருநோய்.

ஐயக்கிளவி

ஐயச்சொல்.

ஐயநாடி

சிலேட்டுமநாடி.

ஐயவதிசயம்

ஒரலங்காரம்.

ஐயனார்கொடி

கோழிக்கொடி.

ஐயாகோ

ஐயகோ.

ஐயாயிரம்

ஓரெண்.