ஐ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஐஞ்ஞூறு

ஓரெண்.

ஐந்தார்

பனை.

ஐந்து

ஓரெண்.

ஐந்தை

சிறுகடுகு.

ஐமிச்சம்

அச்சம்
ஐயம்.

ஐமுகி

காட்டாமணக்கு
சிவன்.

ஐயங்கன்

ஒருபேய்.

ஐயங்காய்ச்சி

ஒரு தேவதை
ஒருநோய்.

ஐயவி

கடுகு.

ஐயானனம்

சிங்கம்.

ஐந்தருநாதன்

இந்திரன்

ஐப்பசி

துலை ( 30 ) (18 oct)

ஐஸ் கிரிம்

பனிக்குழைவு

ஐய

அதிசயக் குறிப்பு. ஐயவின்னதொ ரற்புத மாயைய (திருவிளை. விடை.23).
இரக்கக் குறிப்பு. ஆதுலரானீ ரந்தோ வையவென் றழுது (திருவிளை. மாமனாக. 23).
வியக்கத்தக்க. ஐயகோங் குறைத்தர (கலித். 29).
நொய்ய. ஒருதனக்குள்ள வைய படையையும் (திருவாலவா. 46, 12).
அழகிய.

ஐயகோ

இரக்கம் துக்கங்களின் குறிப்பு. ஐயகோவென் றலம்வருவாள் (வெங்கைகோ. 246).

ஐயையோ

இரக்கக்குறிப்பு.

ஐயோ

அதிசயக்குறிப்பு. (சூடா.)
இரக்கக்குறிப்பு (சீவக. 2622, உரை.)
சோகக் குறிப்பு. ஐயோ விதற்கோ வருந்தவமுன் செய்தாயே (கந்தபு. அசுரேந். 7).

ஐக்காரிகன்

திருடன்.

ஐங்கணைக்கிழவன்

மன்மதன்.

ஐங்காயதயிலம்

பிண்டதயிலம்.