ஏ - வரிசை 6 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏதுவலங்காரம்

ம், "வேண்டுதல், வேண்டாமையிலானடி, சேர்ந்தார்க்கியாண்டு, மிடும்பையில்;
ஓரலங்காரம், அது யாதாயினுமொரு பொருளின்னகாரணத்தாலிவ்வாறாயதெனச், சிறப்பாய்க்கூறுதல், உ;
- ōralangkāram, அது yātāyiṉumoru பொருளின்னகாரணத்தாலிவ்வாறாயதெனச், ciṟappāykkūṟutal, u

ஏத்துவம்

பின்பு.

ஏத்துவாபாசம்

தூஷணை.

ஏந்திழை

பெண்.

ஏந்திழையார்

பெண்கள்.

ஏந்துதல்

கைநீட்டுதல். நீ தர நான் ஏந்தி வாங்கினேன்
கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான்
தாங்குதல். அடிமை படிக்கத்தை ஏந்தி நின்றான்
தரித்தல். அங்குசபாசமேந்தி (சூடா.)
சுமத்தல். உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது
ஓங்குதல். நில னேந்திய விசும்பும் (புறநா. 2,2)
சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899)
மிகுதல். (தொல். பொ. 543, உரை.)
தாங்கல்

ஏந்தெழில்

மிக்க, அழகு.

ஏமகண்டன்

ஓரிராக்கதன்.

ஏமபேதி

கற்கடகபாஷாணம்.

ஏமாங்கதம்

சீவகன்தேசம்.

ஏமாப்பிரகம்

பொன்னப்பிரகம்.

ஏமிலாப்பு

அலமாப்பு.

ஏம்பலிப்பு

அங்கலாய்ப்பு.

ஏரடித்தல்

ஏருழல்.

ஏரத்தை

பிடரிக்காம்பு.

ஏராண்மை

உழவு.

ஏரின்வாழ்நர்

பூவைசியர்.

ஏருழுநர்

உழவர்.

ஏர்த்தொழில்

உழவுத்தொழில்.

ஏர்ப்பு

ஈர்ப்பு.