ஏ - வரிசை 4 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏகசிந்தை

ஒரே நினைவு. நாடொறு மேகசிந்தையனாய் (திவ். திருவாய். 5, 10, 11).
ஒருமனம்
ஒன்றிப்பு
ஒத்தமனம்

ஏகசிருங்கன்

கிருஷ்ணன்.

ஏகதமன்

அநேகருள் ஒருவன்.

ஏகதுரீனன்

ஏகதுரன்.

ஏகதேசக்காரன்

மாறுபாடுள்ளவன்.

ஏகபதம்

ஒற்றைவழி.

ஏகபதி

வழி.

ஏகப்பத்திரிகை

வெண்டுளசி.

ஏகபாதன்

சிவன்.

ஏகம்பட்டசசாரம்

ஒருவகை, யுலோகம்.

ஏகம்பன்

காஞ்சீபுரத்திற் கோயில் கொண்ட சிவபிரான். ஏத்தநின்ற வேகம்பன்றன்னை (தேவா. 1039, 7).

ஏகலிங்கன்

குபேரன்.

ஏகவாரி

சிறுசுரிகை.

ஏகாக்கம்

காக்கை.

ஏகாங்கவாதம்

ஒருவகைவாதநோய்.

ஏகாதசம்

பதினோராமிடம். ஏகாதசந்தன்னி லெக்கோளுநிகரென்ன (பாரத. பதினேழாம். 228).

ஏகாத்தியம்

தனிச்செங்கோன்மை.

ஏகாந்தஸ்தலம்

தனித்தவிடம்.

ஏகாரவல்லி

பலா
பாகல்

ஏகாலியர்

வண்ணார்கள்.